TC வாங்கி வேறு பள்ளியில் சேராத மாணவர் விபரம் சமர்ப்பிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 18, 2025

TC வாங்கி வேறு பள்ளியில் சேராத மாணவர் விபரம் சமர்ப்பிக்க உத்தரவு



TC வாங்கி வேறு பள்ளியில் சேராத மாணவர் விபரம் சமர்ப்பிக்க உத்தரவு - Order to submit details of students who have obtained TC and have not joined another school

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் விபரங்கள், யுடைஸ் எனும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதில் ஆண்டுதோறும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர், பள்ளியை விட்டு மாற்றுச்சான்றிதழ் பெற்றுச்செல்லும் மாணவர் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளிகளில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெறும் மாணவர், ட்ராப் பாக்ஸ் எனும் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறு பள்ளியில் புதிதாக சேரும்போது, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். நடப்பு கல்வியாண்டில் இறுதி செய்யப்பட்ட, ட்ராப் பாக்ஸ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, பள்ளியில் சேர்த்தல் பதிவு விடுபட்டிருந்தால், அவற்றை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, மாற்றுச்சான்றிதழ் பெற்று, இதுவரை வேறு பள்ளிகளில் சேராத மாணவர் விபரம், தொடர்பு எண் உள்ளிட்டவற்றை சேகரித்து, அந்தந்த வட்டார வள மையத்தில் வரும், 27க்குள் சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு கடந்த, 13ல் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.