பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில பேச்சுப்போட்டி வரும் வரும், 24ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுரை
மாநில பேச்சுப்போட்டி வரும், 27ல் நடக்கிறது
கல்விக்கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் மாநில அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட இருக்கிறது.
திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
அகில உலக கம்பன் கழகங்கள் சார்பில், தமிழக அளவில் அனைத்து கம்பன் கழகங்களையும் இணைத்து, மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்த விழாக்குழு அமைத்திருக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட அளவில், மண்டல அளவிலான போட்டி, வரும், 27 மற்றும், 28 ஆகிய தேதிகளில், கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது. இது, கால் இறுதி போட்டியாக நடத்தப்படும்.
இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும், 24ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விபரங்களுக்கு, 93456 51066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.