உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்பாசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 13, 2024

உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்பாசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்பாசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

முன்பு ஒரு பள்ளிக்கு ஓராசிரியரை நியமித்ததன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பணிச்சுமை கருதி நடவடிக்கை....

பள்ளிக் கல்வி இயக்ககம் - 2024 - 2025 ஆம் கல்வியாண்டு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 9, 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வகுப்பு ஆசிரியர்களை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமனம் செய்தல் நான் முதல்வன் இணையதளத்தில் உள்ள உயர்கல்வி சார்ந்த காணொளிகளை திரையிடுதல்

மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு (CG Assessment) மற்றும் மனநலன் மற்றும் வாழ்வியல்திறன் மதிப்பீடு (Emotional Well Being Assessment) கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து. -

1.பள்ளிக் கல்வித் துறை செயலரின் ஆய்வுக் கூட்டம், நாள் 02.12.2024

2. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்.1292/ஆ2/நா.மு-16 ஒ.ப.க/2024 நாள்:-24-08-2024

3. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்.1292/ஆ2/நா.மு-17 ஒ.ப.க/2024 நாள்:-24-08-2024

4. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்.1292/ஆ2/நா.மு-20 ஒ.ப.க/2024 நாள்:-14-10-2024 2025 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் மேம்பாடு சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் "உயர்கல்வி வழிகாட்டி" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 250 மாணவர்கள் வரை ஒரு விருப்பமுள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் தலைமை ஆசிரியர்களால் தெரிவு செய்து நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது மாவட்ட அளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள், மனநலன் மற்றும் வாழ்வியல்திறன் செயல்பாடுகள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பின்வரும் கூடுதல் நெறிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே மட்டுமே அனைத்து மாணவர்களும் உயர்கல்வி தொடர்வதை உறுதிசெய்திட இயலும். எனவே, இவ்விலக்கினை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கனவே உள்ள ஓர் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியருடன் கூடுதலாக 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வாரியான வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக தலைமை ஆசிரியரால் நியமனம் செய்யப்பட வேண்டும். மாவட்ட அளவில் பயிற்சி பெற்று ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் சார்ந்த பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியரால் நியமிக்கப்பட வேண்டும். அந்த பள்ளியின் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டு வகுப்பாசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி அளவிலேயே உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளரால் தலைமை ஆசிரியர் முன்னிலையில் அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும், மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதனை ஊக்குவிக்கும் விதமாக என்னென்ன உயர்கல்வி பயிலலாம், அதற்கு என்ன பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பாட வேளையில் உயர்கல்வி வழிகாட்டி வகுப்பாசிரியர் தெரிவித்தல் வேண்டும். இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் சார்ந்த புரிதல்கள் ஏற்படும். மேலும், நான் முதல்வன் இணையதளத்தில் (https://naanmudhalvan.tnschools.gov.in) உள்ள உயர்கல்வி குறித்த காணொளிகள் மற்றும் மாதந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி சார்ந்து மாநில திட்ட இயக்ககத்திலிருந்து பகிரப்படும் இணைய உள்ளடக்கங்களையும் வகுப்பாசிரியர்கள் அந்தந்த வகுப்புகளிலேயே ஒளிபடக்காட்டி (Projectors), திறன் பலகை (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வாயிலாகவும் மாணவர்களுக்கு திரையிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தினந்தோறும் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கருத்துகளை மாணவர்கள் சிந்திக்க தூண்டும் வகையிலும் அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் அவர்களிடையே பகிர்ந்திடவும் தேவையான நடவடிக்கை எடுத்திட அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள். மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியினை (Emotional Well Being) சார்ந்து உயர்கல்வி வழிகாட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள வகுப்பாசிரியர்களே வகுப்பளவில் மாணவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படுகின்ற இணைய உள்ளடக்கங்களையும் அந்தந்த வகுப்புகளிலேயே ஒளிபடக்காட்டி (Projectors), திறன் பலகை (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வாயிலாகவும் மாணவர்களுக்கு திரையிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு (CG Assessment) மற்றும் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் மதிப்பீடு (Emotional Well Being Assessment) சார்ந்த மதிப்பீடுகள் டிசம்பர் மாதம் முதல் மாணவர் வாரியாக EMIS id உள்ளீடு மூலம் நடத்தப்படாது என்றும் இவ்விரண்டு மதிப்பீடுகளும் வகுப்புத் தேர்வாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள். இச்செயல்முறைகளை அனைத்து மாவட்ட நிலையிலான ஆய்வு அலுவலர்களுக்கும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உடன் அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD DSE - Naan Mudhalvan Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.