அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 8, 2024

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு அறிவிப்பு.



அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு அறிவிப்பு.

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு 25.11.2024க்குள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த முதலமைச்சர் உத்தரவு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடைய அறிவுரையின்படி தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும் அரசாணை வெளியீடு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அறிவிப்பு தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று, நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசினர் பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை (counseling) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024-க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.