"பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 8, 2024

"பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி!



"பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமாெழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் 3 ஆண்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார். குறிப்பாக தமிழ்புதல்வன், புதுமைப்பெண், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.