பகுதி நேர ஆசிரியர்கள் :
12 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! -
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழ்நாடு ஆசிரியர் சங் கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வெ. சரவ ணன் தலை மையில் இணைய வழியில் நடை பெற்றது. மாநிலப்பொருளா ளர்த. ராமஜெயம் வரவேற் புரை ஆற்றினார். மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில அமைப்பு செயலா ளர், பூ .ஜெகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கூட் டத்தில், பதினாறுதீர்மானங் கள் நிறைவேற்ற ப்பட்டன. அதன் விபரம் வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியை செல்வி. ரமணிபடுகொலைசெய்யப் பட்டதற்குதமிழ்நாடு ஆசிரி யர் சங்கம் தனது கண்ட னத்தை பதிவு செய்கிறது. இது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங் கள் தமிழகத்தில் வேறு எங் கும்நடைபெறாமல் இருக்க மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தைஎதிர்வரும் டிசம்பர் மாதத் தில் நடைபெறுகின்ற சட்ட மன்ற கூட்டத் தொடரி லேயே நிறைவே ற்றவேண்டும். அனைத்து நிலை ஆசிரியர்பதவி உயர் விற்கும்தகுதி தேர்வுதேவை யில்லை என்பதை நடை பெறஇருக்கின்றசட்டமன்ற கூட்டத் தொடரில் அமைச்ச ரவை கூட்டி கொள்கை முடி வாக எடுத்து பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவும்,
புதிய பங்கேற்பு ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வு ஊதிய திட்டம் நடை முறைப்படுத்தப்படும்என்ற உத்தரவு வழங்குமாறும்
தேர்தல் கால வாக்குறுதி யாகஅளிக்கப்பட்ட 12 ஆயி ரம்பகுதிநேரஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர் களுக்குகாலமுறைஊதியம் வழங்கிடவும், 2009-ஆம்ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சரண் விடுப்புஒப்படைப்புசெய்து மீண்டும் ஊதியம் பெறும் நடைமுறையை அமல்படுத் திட வேண்டும்.
உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்களின் பணிச்சு மையை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடி நிலையஅலு வலர் பி.எல்.ஓ பணியில் இருந்து அவர்களை விடு விப்பு செய்யுமாறும் காலி யாகஉள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை யும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள 80 ஆயி ரம் ஆசிரியர்களைக் கொண்டு நிரந்தரமாக பணி அமர்த்தி காலமுறை ஊதி யம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Friday, November 29, 2024
New
12 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! - தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.