எண்ணும் எழுத்தும் - Lesson plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 8, 2024

எண்ணும் எழுத்தும் - Lesson plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI



எண்ணும் எழுத்தும் - Lesson plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI

பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன்படி, தூத்துக்குடி மாவட்டம், திரு. மா.முருகேசன் என்பாரின் மேல்முறையீடு - தகவல் அளித்தல் - தொடர்பாக.

பார்வை

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திரு. மா. முருகேசன், என்பாரது மனு நாள்:24.07.2023.

பார்வையில் காணும் மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-இன் கீழ் திரு. மா. முருகேசன் என்பார் கோரிய தகவல் பின்வருமாறு அளிக்கப்படுகிறது. கோரப்பட்ட தகவல்

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 பாடக்குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசாணைகள், செயல்முறைகள் இருப்பின் அதன் நகல் கோரப்பட்டுள்ளது

தகவலுக்கான பதில்

வரை பாடக் குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துகொள்ளலாம். ஆனால், இதற்கான அரசாணைகள், செயல்முறை ஆணைகள் ஏதும் இந்நிறுவனத்தில் இல்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.