EMIS பணி - பதியதாக 1,800 பேர் விரைவில் நியமனம் - அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 6, 2024

EMIS பணி - பதியதாக 1,800 பேர் விரைவில் நியமனம் - அன்பில் மகேஸ்

EMIS தளத்தில் தகவல்களை பதிவு செய்ய விரைவில் மேலும் 1,800 பேர் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பெரம்பலூர், அக்.6: 'எமிஸ்' செயலியில் தகவல்களைப் பதிவேற்ற 1,800 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தெரி வித்தார். பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர் கழகம் சார்பில், கடந்த கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளிமாணவ, மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாகயிருந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாண விகள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெறும் ஆசி ரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய அமைச்சர் பின் னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்களைத் தடுப்பதில் காவல் துறை, கல்வித் துறைக்கு பொறுப்புணர்வு உண்டு. திருச்சி மாவட்டத்தில் 'எமிஸ்' செயலியில் தகவல்களைப் பதிவேற் றம் செய்ய 149 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, 1,114 அர சுப் பள்ளிகளில் பணி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், விவரங் கள் உள்ளிட்ட தகவல்களை 'எமிஸ்' செயலியில் பதிவேற்றம் செய்ய மேலும் 1,800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவுடன், ஆசிரியர்களுக்கு எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணிச் சுமை குறையும்.

கல்வித் துறை அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மைத் தன்மை இருக்கும்பட்சத்தில், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி. பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கி. மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.