வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 8, 2024

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது . தமிழ்நாட்டில் உள்ள 13,236 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-25ஆம்கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2024-25செயல்முறைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது . அறிவியலும் தொழில்நுட்பமும் பொறியியலும் , கணிதவியலும் வாழ்வை சமூக வாழ்வை மென்மேலும் வசதியாக்க , எளிமையானதாக்க கை கோர்த்து சேவை செய்து வருகின்றன . எந்த ஒரு தொழில்நுட்பமும் கடந்த நூற்றாண்டைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடுகிறது . அதுபோலவே பழமையானதாகவும் ஆகிவிடுகிறது.மாறிவரும் சூழலை எதிர்கொண்டு தங்களை தகவமைத்துக் கொள்ள எதிர்கால சந்ததியினர் தயாராக வேண்டியுள்ளது . இதற்கேற்ப வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இதனை மனதில் கொண்டே தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களின் பல்துறை வளர்ச்சிக்கு பல்வேறு புதுமையான ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வானவில் மன்றங்களின் அடுத்தகட்டம் அனைத்து வகுப்பறைகளிலும் அனைத்து மாணவர்களும் அறிவியலை செய்து பார்த்து கற்றுப் பகிர்ந்துகொள்வதாகவும் , தினம் தினம் புதுமையானதாகப் பரிணமிக்கும் வாய்ப்புள்ளதாகவும் மாறவேண்டியுள்ளது . ஏற்கனவே இப்படி படைப்பாற்றலுடன் செயல்பட்டு வரும் அறிவியல் / கணித ஆசிரியர்களே இதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின்அனுபவங்களைத் தொகுத்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவே தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல்மாநாடு 2024-25 திட்டமிடப்படுகிறது . நோக்கங்கள்:

தமிழ்நாட்டின் பள்ளிகளில் அறிவியல்/கணித வகுப்பறைகளில் நடைபெறும் புதுமையான கற்றல்-கற்பித்தல் முறைகளை பயன்பாட்டுநோக்கில் ஆய்வு செய்து ஆசிரியர்கள் ஆய்வுக்கட்டுரைகளை தயார் செய்து பகிரும் மேடைகளை அமைத்துத்தருதல்.

பகிரும் அறிவியல்/கணித பாடத்திற்கான கருத்தாக்கங்களுக்கான துணைப்பாடங்களை உருவாக்கித் தொகுப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல்.

அறிவியல்/கணிதப் பாடங்களில் புதுமையான மதிப்பீட்டு யுக்திகளைப் பயன்படுத்தி அவற்றை பகிரும் ஆய்வுக்கட்டுரைகளாகப் பகிர வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல்.

ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும்தலைப்புகளில்அமையலாம்.

1. வகுப்பறை கற்றல் கற்பித்தல் அறிவியல்/கணிதம் கற்றலின் இன்ன பிற புதுமையான கண்ணோட்டங்களில் கற்றல்-கற்பித்தலை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை செயல்படுத்திப் பார்த்து ஆய்வு முடிவுகளைப் பகிரலாம்.

2. செயல் ஆராய்ச்சி ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தங்களின் புதுமையான செயல்பாட்டிற்கு முன்பும் பின்னருமான கற்றல் விளைவுகளில் எற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு மனப்பான்மையோடு உற்றுநோக்கி ஆய்வுக்கட்டுரைகளாக்கிப் பகிரலாம்.

3. கற்பித்தலுக்கான துணைபொருள்கள் தயாரித்தல் அறிவியல்/கணிதம் கொள்கையை/கோட்பாட்டை கற்றலில் விளக்கும் ஒரு குறிப்பிட்ட படைப்பாற்றலுடன் கூடிய கற்பித்தலுக்கான துணை பொருள்கள் (Supportive teaching materials)தயாரித்துப் பகிரலாம். 4. மாணவர்கள் குழுவாக கற்றலை ஊக்குவித்தல் மாணவர்கள் குழுவாகக் கற்பதை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டு அதன் விளைவுகளை பகுப்பாய்வு செய்து ஆய்வறிக்கையாக அளிக்கலாம்.

5. புதுமை செயல்பாடுகள் > ஆசிரியர்கள்தங்களது அறிவியல்/கணிதவகுப்பறைகளில் செய்து பார்த்துள்ள பல்வேறு புதுமையான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

6. உலகமும் உள்ளூரும் அறிவியல்/கணிதம் கற்பித்தலில் அகில இந்திய அளவிலும் /உலக அளவிலும் ஏற்பட்டுவரும் புதுமைகளைப் பகிர்ந்து அதனை தமிழக சூழலுக்கு உதவிகரமாக்க வழிவகை கண்டறிந்து பகிரலாம்.

பங்கேற்பாளர்கள்:

தமிழ்நாட்டின் அரசு நடுநிலை/உயர்/மேநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல்/கணித ஆசிரியர்கள்.

தமிழ்நாட்டின் அரசு நடுநிலைப்பள்ளிகள்/உயர்/மேநிலைப்பள்ளிகளில் பிறபாட ஆசிரியராயிருந்தும் அறிவியல்/கணிதம் பாடங்களில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள். >>விருப்பமுள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள்/DIET விரிவுரையாளர்கள். பங்கேற்பதற்கான வழிமுறைகள்:

ஆசிரியர்கள்

> ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்பும் தங்களுடைய Login IDபயன்படுத்தி EMIS தளத்தில் 03.10.2024 முதல் 01.11.2024 க்குள் பதிவு (Registration) செய்ய வேண்டும் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட பதிவுஎண் வழங்கப்படும்.

>>பதிவுஎண்ணைப் பயன்படுத்தி 02.11.2024 முதல் 10.11.2024 க்குள் ஆய்வுசுருக்கத்தினையும் 10.12.2024 ஆய்வுக்கட்டுரையையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

க்குள் முழுமையான ஏதேனும் ஒரு மேலே குறிப்பிட்டுள்ள துணைத் தலைப்புகளில் துணைத்தலைப்பினை தேர்வு செய்து தங்களது ஆய்வுச் சுருக்கத்தினை 200 வார்த்தைகளுக்குள் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முழுமையான கட்டுரை 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் > முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் 4 மண்டல அளவிலான மாநாடுகளில் அடுத்தகட்ட தேர்விற்காக நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

> மண்டல அளவில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள்மாநில அளவிலான மாநாட்டில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மண்டல/மாநில அளவிலான பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும்/ தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வு கட்டுரைகளுக்குபாராட்டும்/பரிசும் அளிக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு:

இந்நிகழ்வினை ஒருங்கிணைக்க அனைத்து இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய இணை இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட DIET முதல்வர்கள், பேராசிரியர்கள் கொண்ட விரிவான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும்.

தேர்வுக்குழு

மண்டல./மாநில அளவிலான பங்கேற்புக்கு ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க கல்வித்துறையால் வல்லுநர் குழு உருவாக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

EMIS மூலம் பதிவு செய்வதற்கான தேதி பதிவு செய்தவர்கள் EMIS மூலம் ஆய்வுச்சுருக்கம் பதிவேற்றம் செய்வதற்கான தேதி முழுமையான கட்டுரை பதிவேற்றம் செய்வதற்கானதேதி மண்டல அளவிலான மாநாடுகள் மாநில அளவிலான மாநாடு நகல்: : 8.10.2024 முதல் 1.11.2024 வரை : 2.11.2024 முதல் 10.11.2024 வரை 11.11.2024 முதல் 10.12.2024 வரை 0 ஜனவரி 2025 பிப்ரவரி 2025

>>இச்சுற்றறிக்கையை தங்கள்ஆளுகைக்குட்பட்டமாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் (DIET), மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு அனுப்பி அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை பங்கேற்க ஊக்கவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட அளவில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை பங்கேற்க செய்யும் முதல் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD DSE - Teachers Science Conference Proceedings -PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.