ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01.07.2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்து அரசாணை வெளியீடு!
ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01-07-2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன !
ஆணை
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கீழ்கண்டவாறு அகவிலைப்படி வீதங்கள் உயர்த்தப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன: -
எந்நாளிலிருந்து திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம் வழங்கத்தக்கது [1] 01.01.2024 [மாதம் ஒன்றுக்கு] அடிப்படை ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியத்தில் 50 சதவீதம் 2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், மாநில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 01-07-2024 முதல் 50 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட மாநில அரசு பணியாளர்களுக்கான ஆணையினை பின்பற்றி, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது கீழே குறிப்பிட்டுள்ளபடி அகவிலைப்படியினை உயர்த்தி அனுமதித்து அரசு ஆணையிடுகிறது:-
4. ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னனு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.
வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும். அதுவே, 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும்.
5.ஒவ்வொரு தனி நபருக்கும் கொடுக்கப்பட வேண்டிய அகவிலைப்படியைக் கணக்கிடுவது ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களின் பொறுப்பாகும்.
6. மாநிலக் கணக்காய்வுத் தலைவரிடமிருந்து முறைப்படியான அனுமதி பெறும் வரை காத்திராமல் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், சென்னை-35 மற்றும் கருவூல அலுவலர்கள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம்.
7. இந்த ஆணை கீழ்க்கண்ட வகைகளைச் வகைகளைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்குப் பொருந்தும். அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள்.
பொதுத்துறை நிறுவனம் / தன்னாட்சி நிறுவனம் / உள்ளாட்சி அமைப்பு/ கூட்டுறவு நிறுவனம் முதலியவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில் தொகையைத் திரும்பப் பெறும் தகுதியுள்ள / திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் திரும்பப்பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசுப் பணியாளர்கள்.
(iii) தற்போதைய மற்றும் எதிர்கால குடும்ப ஓய்வூதியர்கள்; பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களைப் பொறுத்தவரையில் அகவிலைப்படி விகிதாச்சாரத்திற்கிணங்க பிரிக்கப்படலாம்.
(iv) 01-11-1956ஆம் நாளன்று, தமிழ்நாடு மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களில் அதே நாளில் ஓய்வூதியம் பெறுகின்ற முந்தைய திருவாங்கூர்-கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள்.
(v) தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின்கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள்.
8. ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கத்தக்க அகவிலைப்படி குறித்த செலவினங்கள் முறையே கீழ்க்காணும் கணக்குத் தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.
"2071 ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் 01 சிவில் - 101. வயது முதிர்வு - பணி ஓய்வுக்காலப் படிகள் -மாநிலச் செலவினங்கள் - AC ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி -303 அகவிலைப்படி - 01 அகவிலைப்படி.
(IFHRMS: த.தொ.கு. 2071 01 101 AC 30301)" "2071. ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் 01 சிவில் - 105 குடும்ப ஓய்வூதியங்கள் - மாநிலச் செலவினங்கள் AC. தமிழ்நாடு அரசு குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி- 303 அகவிலைப்படி - 01 அகவிலைப்படி (IFHRMS: த.தொ.கு 2071 01 105 AC 30301)"
9. கருணைத் தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்குத் தொகை செலுத்திய/ ஓய்வூதியம் இல்லாத பணியாளரமைப்பைச் சேர்ந்த பயனாளிகளான இறந்துவிட்ட பணியாளர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்த ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.
10. மேலே பத்தி-3ல் ஒப்பளிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைப்பட்டியல் சமர்பிப்பது தொடர்பாக கருவூல அலுவலர்கள்/ உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலருக்கு தக்க அறிவுரை வழங்கிட ஆணையர், கருவூலக் கணக்கு துறை, சென்னை கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
11. இதற்கான பட்டியல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குமாறு கருவூல அலுவலர்கள்/ சம்பள கணக்கு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
12. இந்த ஆணையில் அகவிலைப்படி அனுமதித்ததன் காரணமாக அதிகரித்துவிட்ட செலவினம், 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கிணங்க, அடுத்து வரும் மாநிலங்களுக்கிடையே பிரித்துக்கொள்ளத் தக்கதாகும். CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.319 - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.