தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்!!!
தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பது இதுவே முதல் முறை உடுமலை சுற்றுவட்டாரத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங் களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வரும் 21-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக உடுமலை வட்டாரக் கல்வி அலுவலகம் தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பு:
உடு மலை வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சிநடுநிலைப்பள்ளி களில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங் களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி யிடங்களுக்கு பி.எட் படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப் பட உள்ளனர்.
இவர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கு ஆசிரியர் பட்டயப் படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்றவர்கள் தற்காலிக இடைநிலை ஆசிரியராக நியமிக் கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 12,000 வழங்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் வரும் வரும் 21-ம் தேதி காலை 11 மணிக்கு உடுமலை பார்க் எக்ஸ்டென்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேரில் வர வேண்டும்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.