TET தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 14, 2024

TET தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து வழங்க வேண்டி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து வழங்க வேண்டி ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

இந்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப் (RTE)படி ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறுதல் கட்டாயம் ஆகும். ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா,பீகார்,நாகலாந்து, சத்தீஸ்கர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் BC/MBC/SC/ST/DNC/PWD ஆகிய இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆகவும் உள்ளது.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தேர்ச்சி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சிறப்பு அரசாணைப்படி இன்னும் 82 ஆகவே உள்ளது தேர்வர்கள் நலன் கருதி 10 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அரசு ஆசிரியர் பணி பெற இரண்டு வகையான போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இது கூடுதல் மனச்சுமை தருகிறது. தமிழ்நாட்டில் அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே அரசு பணிக்கு உதவாத வெறும் தகுதியை மட்டும் தீர்மானிக்கும் BC/MBC/SC/ST/DNC/PWD உள்ளிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆக குறைத்து வழங்க வேண்டும். ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சமூகநீதி, சம உரிமை கிடைத்திடச் செய்யுமாறு ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.