Ph.D.,மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 21, 2024

Ph.D.,மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!



Ph.D.,மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister‘s Research Fellowship) – 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்துதல் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister's Research Fellowship) 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/-வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் ணை வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை

அரசாணை (நிலை) எண். 18. நாள்:10.09.2024

குரோதி -ஆவணி-25,

திருவள்ளுவர் ஆண்டு, 2055,

படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண்.65, மாற்றுத்திறனாளிகள் நல் (மாதிந-2.1)த் துறை, நாள் 12.07.2013.

2. அரசாணை (நிலை) எண்.13, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை, நாள் 04.05.2018.

3. அரசாணை (நிலை) எண்.16 மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை, நாள்.04.07.2023.

4. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்001174/சிப.1/2024, நாள்.01.07.2024 மற்றும் 24.07.2024

******

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையினை / கீழ்க்கண்டவாறு உயர்த்தியும் மற்றும் 2013-2014-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணையிடப்பட்டது:-

2.மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2018-2019-ஆம் நிதியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுள் சுமார் 52 நலத்திட்டங்களை வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல் ஆணையருக்கு அதிகாரப்பகிர்வு அவ்வாணையின் (Delegation of Power) வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. பத்தி 2 (i) (4)-ல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமும் (Scholarship Scheme) இடம் பெற்றுள்ளது.

3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மாற்றுத்திறன் மாணாக்கர்களின் சிறப்பு கல்வியினை ஊக்குவித்திட ஏதுவாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் வரும் கல்வி உதவித் தொகையினை 2023-2024-ஆம் ஆண்டு முதல் கீழ்க்கண்டவாறு இருமடங்காக உயர்த்தியும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது:-

4. இந்நிலையில் 21.06.2024 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது இன்னபிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:- "மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புக் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி, ஆராய்ச்சி படிப்பு (Ph.D.) மாணவர்களுக்கும் மேற்கொள்ளும் மாற்றுத்திறன் ஆண்டுதோறும் ரூ.1,00,000/-வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50.00இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் "முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chef Minister's Research Fellowship) செயல்படுத்தப்படும்"

5. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கடிதத்தில், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி, ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) படிக்கும் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் நீட்டித்து வழங்குவதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி படிப்பு படித்து அவர்களது கல்வித் தகுதியினை உயர்த்தி கொள்வதன் மூலம் சமுதாயத்தில் உயரிய நிலையினை அடைய ஏதுவாக அமையும் என்றும், மேலும், முழுநேர ஆராய்ச்சி படிப்பில் (Ph.D.,) சேரும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், "முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister's Research Fellowship) எனும் புதிய திட்டத்தின்கீழ், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,00,000/- வீதம் 50 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50.00 இலட்சம் செலவில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இத்திட்டத்தினை செயல்படுத்திடுத்திட உரிய அரசாணை வழங்குமாறு கோரியுள்ளார்.

6.மேற்காணும் சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து "முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister's Minister's Research Research Fellowship) என்று, கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 50 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1,00,000 வீதம், ரூ.50.00 இலட்சம் (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது. வழிகாட்டு நெறிமுறைகள் முழுநேர / பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) பயிலும், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர / பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.

ரூ.1.00/- இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் நேரடியாக மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வங்கிக் கணக்கிற்கு ECS மூலமாக செலுத்தப்படும். .

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை / தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழுநேர / பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச் சான்று (Nativity Certificate) முதலியவற்றை சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

7. மேலே பத்தி 6-ல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD G.O PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.