IE மாணவர்களுக்கான உறுதிமொழி
IE மாணவர்களுக்கான உறுதிமொழி திங்கள் கிழமை தோறும் காலை வழிபாட்டு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும். 1.உறுதிமொழி - "ஒற்றுமையை வளர்ப்போம்":
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த நாங்கள். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம். முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அளிப்பது அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.