மோசடி புகாரில் BEO கைது - முழு விபரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 19, 2024

மோசடி புகாரில் BEO கைது - முழு விபரம்



மோசடி புகாரில் BEO கைது - முழு விபரம்

தருமபுரி தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி வசூலித்து மோசடி செய்த புகாரில் வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி பங்குதாரராக சேர்ப்பதாக கூறி மோசடி

தருமபுரி கடத்தூர் தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரூ.12.23 கோடி மோசடி தொடர்பாக தனியார் பள்ளியின் தாளாளர் முனிரத்தினம் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூ.12.23 கோடி மோசடி – வட்டார கல்வி அலுவலர் கைது

மோசடிக்கு துணைப்போன வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள பள்ளியின் தாளாளர் முனிரத்தினம் உள்ளிட்ட 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிக்கு பங்குதாரர் தேவை என விளம்பரம்செய்து மோசடி

கடம்பத்தூரில் 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு பங்குதாரர்கள் தேவை என நாளிதழில் 2018-ல் விளம்பரம் செய்யப்பட்டது. விளம்பரத்தை பார்த்த சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், அவரது குடும்பத்தினர் பள்ளி தாளாளர் முனிரத்தினத்தை தொடர்பு கொண்டுள்ளனர். முனிரத்தினம் மற்றும் அவரது ஏஜெண்டுகள் கூறியபடி ரூ.2 கோடி பணம் கொடுத்ததாக வசந்தகுமார் போலீசில் புகார் தெரிவித்தார். ரூ.12 கோடி மோசடி-தனியார் பள்ளி தாளாளர் மீது வழக்கு

வசந்தகுமார் மட்டுமின்றி மேலும் 10 பேரிடம் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலித்து முனிரத்தினம் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் தனியார் பள்ளி தாளாளர் முனிரத்தினம், அவரது கூட்டாளிகள் சம்பத், பன்னீர்செல்வம் உள்பட 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

மோசடியில் இடைத்தரகராக செயல்பட்ட கல்வி அலுவலர் கைது

பள்ளியில் பங்குதாரராக சேர்க்கும் மோசடியில் கல்வி அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. ரூ.12.23 கோடி மோசடி தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.