மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 31, 2024

மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!



மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் (Personal Clerk) - வழிகாட்டுதல்கள் மற்றும் பணியில் சேர்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

தமிழ் நாடு அரசு தலைமைச் செயலரின் நேர்முக் கடித்தில் , கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கல்வி ஆய்வு ( District Education Review ) நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மறுஆய்வுக் கூட்டங்களைப் போன்று மாவட்டக் கல்வி ஆய்வு மாதந்தோறும் நடத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் ( DLMC ) தலைவர் என்ற முறையில் , இந்த மதிப்பாய்வில் மாவட்ட ஆட்சியரின் தலைமையானது , அனைத்து பங்குதாரர்களும் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாகப் அறிந்திருப்பதையும் , எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளளது .

மேலும் , குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் " கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் " மாதம் ஒருநாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் . பெற்றோர்கள் என அனைவரும் கொள்வார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வை (1)ல் காணும், தமிழ் நாடு அரசு தலைமைச் செயலரின் நேர்முக் கடித்தில், கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கல்வி ஆய்வு (District Education Review) நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மறுஆய்வுக் கூட்டங்களைப் போன்று மாவட்டக் கல்வி ஆய்வு மாதந்தோறும் நடத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் (DLMC) தலைவர் என்ற முறையில், இந்த மதிப்பாய்வில் மாவட்ட ஆட்சியரின் தலைமையானது, அனைத்து பங்குதாரர்களும் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாகப் அறிந்திருப்பதையும், எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளளது.

மேலும், குழந்தைகளின் கல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் "கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்" மாதம் ஒருநாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வை (1)ல் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, மாவட்டக் கல்வி ஆய்வு ((District Education Review), கல்வி வளர்ச்சி குறைதீர் நாள், மாவட்ட கண்காணிப்பு குழு. பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள்,

நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாவட்ட அளவில் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் கீழ் கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்கள் (Educational PCs of Collectors) நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 38 கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்களுக்கு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக் சார்ந்து பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கடந்த 18.07.2024 மற்றும் 19.07.2024 அன்று சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது என்றும் (பயிற்சி பெற்றவர்களின் விவரம் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது) இவர்கள் அனைவரும் தாங்கள் பணிபுரியும் திட்ட அலுவலம்/வட்டார வள மையம்/ முதன்மைக் கல்வி அலுவலகம்/பள்ளியிலிருந்து 31.07.2024 அன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01.08.2024 முற்கபல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்திட பார்சை (2)ல் காணும் 30.07.2024 நாளிட்ட கடிதத்தில் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனி எழுத்தர்கட்கு கீழ்க்காணுமாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்டுள்ள தனி எழுத்தர்களுக்கான வழிக்காட்டுதல்கள் :

1. நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகள் :

தலைமை ஆசிரியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குடிமை சமூக அமைப்பினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் போன்றோரை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களுக்கு ஒருங்கிணைக்க வேண்டும்.

கல்வி வளர்ச்சி குறைதீர் நாளுக்கான தரவுகள் போன்ற முன்னேற்பாடுகள், கூட்டம் முடிந்தபின் தீர்வு காணப்பட வேண்டியவைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியவை. கூட்டங்களை ஏற்பாடு செய்யும் முன்னர் அதற்கான அட்டவணை, தேவையான தரவுகள், முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

2. தரவு மேலாண்மை (Data Management):

கால பள்ளிகளின் செயல்பாடு, வருகை பதிவு, உட்கட்டமைப்பு, பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் EMIS உள்ளீட்டில் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக சேமிக்க வேண்டும். சேமித்து வைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பள்ளியின் தேவைகளை வகைப்படுத்தி மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு உடனுக்குடன் எடுத்துச் செல்ல வேண்டும். 3. தகவல் தொடர்பு :

நியமிக்கப்பட்டுள்ள கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்கள் மாவட்ட ஆட்சியருக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் இணைப்புப் பாலமாக இருந்து பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

4. ஆவணப்படுத்துதல் :

மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்வி சார்ந்த தேவைகள், பிரச்னைகள் சரிசெய்வதற்கான துல்லியமான விளக்கங்களுடன் அறிக்கை தயாரித்து சமர்பிக்க வேண்டும்.

5. நடைமுறைப்படுத்துதல் :

அதை மாநில அளவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், செயல்பாடுகள் சரியான முறையில் பள்ளிகளுக்கு செல்வதை உறுதி செய்தல். பள்ளிக் கல்வித்துறையில் கல்வி சார்ந்து நடக்கும் மாற்றங்கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். 6. பிற வழிகாட்டுதல்கள் :

நியமிக்கப்பட்டுள்ள கல்விச் செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உடன் சென்று சார்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட்-1 ஆம் தேதி பணியில் சேர வேண்டும்.

• தனி எழுத்தர்கள் விடுப்பு எடுக்க நேர்ந்தால் தற்போதைய நடைமுறையை பின்பற்றி கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

பணி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஆணைகளை பின்பற்ற வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர்-செயலர் தெரிவித்துள்ளவாறு மேற்கண்ட அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தனி எழுத்தர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு – பயிற்சி பெற்றவர்களின் விவரம் CLICK HERE TO DOWNLOAD DSE - Educational PCs to Collector - Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.