மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் PA பணியிட மாறுதல் -இணை இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை
ந.கஎண். 27756/சி1/இ1/2024, நாள் 18 .07.2024
பொருள்:
பார்வை:
அரசு / நகராட்சி உயர்நிலைப் தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு - கல்வியாண்டில் வழங்கவும் 2023 - 24ம் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு மேல் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணிபுரிபவர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல்
3 ஆண்டுகளுக்கு கீழ் விருப்ப மாறுதல் வழங்கவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஆணை வழங்குதல் - சார்பு. 1. அரசாணை (நிலை) எண். 176, பள்ளிக் கல்வி ப.க5(1) துறை, நாள்: 17.12.2021. பணிபுரிபவர்களுக்கு
2. அரசாணை (நிலை) எண்.12 பள்ளிக் கல்வி (ப.க.5(1)) துறை, நாள்: 03.02.2022.
3. அரசாணை (நி 4. லை) எண்.15 பள்ளிக் கல்வி (ப.க.5(1)) துறை, நாள்: 10.02.2022. 5. அரசாணை (நிலை) எண்.94 பள்ளிக் கல்வி (ப.க.5(1)) துறை, IITT: 24.06.2023
6. அரசாணை (நிலை) எண்.26 பள்ளிக் கல்வி (ப.க.5(1)) துறை, நாள்: 24.01.2024
7. அரசாணை (நிலை) எண்.48 பள்ளிக் கல்வி (ப.க.5(1)) துறை, நாள்: 21.02.2024
8. சென்னை 6, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் — ந.க.எண்.17929/அ1/இ4/2023, நாள் 06.05.2024
9. அரசுக்கடித எண் 3835/ப.க.5(1)/2024-1, நாள் 29.04.2024 பணிபுரிந்து ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி,உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் வரும் ஆசிரியர்களின் நலன்கருதி ஆண்டுதோறும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஒவ்வொறு ஆண்டும் அரசாணை வெளியிடப்படவேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டு பார்வை 1ல் காணும் அரசாணையின் வாயிலாக பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து பொதுவான கொள்கைகளுடன் நிலையான அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பார்வை 9ல் காணும் அரசுக்கடிதத்தில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை மே 2024 மாதம் தொடங்கி நடத்திட அனுமதி வழங்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு மேல் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) பணிபுரிபவர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கவும், 3 ஆண்டுகளுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் வழங்கவும் (இந்த ஆண்டு மட்டும்) சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுருத்தப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகப் பணிபுரிபவர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் ஆணை வழங்கப்படவேண்டும் என்பதனால் எவ்வித காலதாமதமுமின்றி உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் / விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் பெற்றதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு சிறந்த நிர்வாகத்திறனும் ஆளுமைத்தன்மையும் கொண்டு சிறப்புடன் பணியாற்றக்கூடிய அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரின் நேர்முக உதவியாளராகப் (இடைநிலை) நியமனம் செய்வது சார்ந்து பின்னர் தெரிவிக்கப்படும்.
பெறுநர்
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் CLICK HERE TO DOWNLOAD CEO -PA - over 3 years transfer counselling PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.