ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு - அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 18, 2024

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு - அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!



ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு - அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு வழங்கி TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கு பெற்று, நியமனம் பெற அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!

மிழ்நாடு பொது சார்நிலைப்பணி /மாநகராட்சி/உயர்நிலை - - அரசு / நகராட்சி மேல்நிலைப் பணிமாறுதல் பணிபுரியும் நிலை - பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் ஆணை வழங்க இயலாததால் பதவி உயர்வின்றி வாய்ப்புகளை உருவாக்குதல் 1 பணிமாறுதல் - பதவி உயர்வு கருத்துருக்கள் அனுப்புதல் - சார்ந்து.

பார்வை :

1. அரசாணை நிலை 6T GOT.2378 கல்வி, நாள்.30.10.1981.

2. அரசு கடித எண்.31559/ப.க.4(2)/2019-3, நாள்.04.08.2022.

3.கடித (efile)எண்.14758/ப.க.4(1)/2022, நாள்.14.11.2022.

4. கடித எண்.773/ப.க.4(1)/2024, நாள்.31.01.2024.

5. 16.05.61600т.70358/15/84/2023, நாள்.09.03.2024.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 2862 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளும் 2913 அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளும் ஆக மொத்தம் 5775 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேற்காண் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் 5907 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆய்வக உதவியாளர் பணியிடமானது பொது சார்நிலைப்பணியில் வரையறுக்கப்பட்டுள்ள பணியிடமாகும். 2. Appointment:-

Category (1) Lab Assistant X. XI. XII. Method

(2) Transfer from the category of record clerk in the School Education Department in class XXII of the Tamilnadu General Subordinate services; or Recruitment by transfer from persons belonging to School Education in Tamilnadu Basic Service; or By Direct Recruitment if no suitable and qualified candidates are available for appointment by the methods specified in items (i) and (ii) above கற்றல் மூலம் பார்வை 3ல் காணும் அரசு கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல், செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல், மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செல்பாடுகள் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் கீழ்க்கண்டவாறு

1. அடல் டிங்கரிங் ஆய்வகம்

2. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் / மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல்

3. அறிவியல் ஆய்வகங்கள்

4. மொழி ஆய்வகங்கள்

5. தொழிற்கல்வி ஆய்வகங்கள்

6. கணித ஆய்வகங்கள்

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் இருப்பது அவசியமான ஒன்றாகவும் உள்ளது. அதனால் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆய்வக பணியிடங்கள் நிர்ணயிக்கவும் பணி நிரவல் மேற்கொள்ளவும் அரசின் ஆணை உதவியாளர் வேண்டி கருத்துரு பார்வை 5ல் காண் கடிதத்தின்படி அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) OTGOOT.162, நிதித் (ஊதியப் பிரிவு) நாள்.13.04.1988ன்படி நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய ஆய்வக உதவியாளர் உதவியாளர்களுக்கும், துறை.

விகிதங்களின்படி மற்றும் ஆவண இளநிலை எழுத்தர்களுக்கும் கீழ்கண்டவாறு ஊதிய விகிதங்கள் வழங்கப்பட்டன. இளநிலை

உதவியாளர்

ஆய்வக உதவியாளர்

ஆவண எழுத்தர்

ஊதிய விகிதம்

3200-85-4900

3050-75-3950-80-4590

2610-60-3150-65-3540

இதில், ஆய்வக உதவியாளர்கள், இளநிலை உதவியாளரைவிட குறைவான ஊதிய விகிதம் பெற்று வந்ததால், தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் விதி எண்.3(g)-க்கு உட்பட்டு பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். அதற்கு முந்தைய ஊதியக்குழு ஊதிய விகிதங்களிலும் இத்தகைய நிலையே இருந்ததால், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆய்வக எழுத்தர்கள் பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளர் மற்றும் ஆவண எழுத்தர்கள் உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அரசாணை

6T GOOT.234, (நிலை) நிதித் (ஊதியப் பிரிவு) துறை,

நாள்.01.06.2006இன்படி இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கு கீழ்காணுமாறு ஊதிய விகிதங்கள் வழங்கப்பட்டன. ஊதிய விகிதம்

இளநிலை 5200-20200+ தர ஊதியம் 2000

உதவியாளர் ஆய்வக உதவியாளர் 5200-20200+ தர ஊதியம் 1900

ஆவண எழுத்தர் 4800-10000+ தர ஊதியம் 1400

இந்த ஊதியக் குழுவிலும், முதலில் ஆய்வக உதவியாளர் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கு இளநிலை உதவியாளர்களைவிடக் குறைந்த ஊதிய விகிதம் வழங்கப்பட்டதால், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் விதி எண்.3(g)இன்படி பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதனிடையே, அரசாணை (நிலை) எண்.45, நிதித் (ஊதியப் பிரிவு) துறை, நாள்:10.02.2011-ன்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதிய விகிதமும், அரசாணை (நிலை) எண்.63, நிதித் (ஊதியப் பிரிவு) துறை, நாள்.26.02.2011-ன்படி ஆய்வக உதவியாளர்களுக்கான ஊதிய விகிதமும் ஊதிய விகிதமும் கீழ்கண்டவாறு திருத்தி அமைக்கப்பட்டன. அரசாணை (நிலை) எண்.63, நிதித் (ஊதியப் பிரிவு) துறை, நாள்.26.02.2011- ன்படி ஆய்வக உதவியாளர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதம், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கும் பொருந்தும் என அரசு கடிதம் எண்.41186/சி2/2012-2, பள்ளிக் கல்வித் துறை, நாள்.18.02.2013ன்படி தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் உதவியாளர் ஆகிய இரு பணியிடங்களும் ஒத்த ஊதிய விகிதத்திற்கு (Identical scale of pay) கொண்டுவரப்பட்டன. அதுவரை இளநிலை உதவியாளர்களை விட குறைந்த ஊதிய விகிதம் பெற்று வந்ததன் அடிப்படையில் பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்று வந்த ஆய்வக உதவியாளர்கள் அதன்பின்னர் இளநிலை உதவியாளர்களாக பணிமாறுதல் பெற வழிவகை இல்லாத நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதிகளில் விதி 3(g)(i)ன்படி இளநிலை உதவியாளர் பதவிக்கான ஊதிய விகிதத்திற்குக் கீழ் ஊதிய விகிதம் பெற்று வரும் பணி நிலையில் உள்ளவர்களுக்கே (Category carrying scale of pay lower than that of Junior Assistant) இளநிலை உதவியாளராக பணிமாறுதல் (Recruitment by Transfer) வழங்கிட வழிவகை உள்ளதால், 26.02.2011 முதல் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான ஊதிய விகிதம் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான ஊதிய விகிதத்திற்கு நிகராக கொண்டுவரப்பட்டதால், தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் விதி 3(g) தளர்வு செய்து ஆணை வழங்கிட அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டதில் பார்வை-2ன்படி கருத்துருவை ஏற்க இயலாது தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில், விதி 3(g)ன் படி பரிசீலித்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களாக பணிமாறுதல் வழங்கக் கோரி V.சுமதி மற்றும் 4 நபர்கள் தொடர்ந்த வழக்கு W.P எண்.13849/2020 தீர்ப்பாணை நாள்.05.02.2021-ல் கீழ்காணுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

14. Needless to mention that in the absence of avenues for career growth would not sub serve efficient administration as the same would demotivate any employee from discharging the duties to his/her full potential. In any case, the doctrine of legitimate expectation is one of the recognized principles in service jurisprudence which is to be applied in any given case, whenever such legitimate expectation is sought to be negated.

18. In the above circumstances, this writ petition is disposed of with a direction to the first respondent to issue necessary clarification or to initiate any action for inclusion of the post of Lab Assistant for promotion to the post of Junior Assistant, notwithstanding the parity of pay scales as applicable to both the posts in order to subserve the spirit of the rule for which it was amended in 2002.

ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தினர் பதவி உயர்வு குறித்து அரசுக்கு தொடர் கோரிக்கைகளை அளித்து வருகிறார்கள். கீழ்நிலை பதவிகளிலிருந்து பணிமாறுதல் பெற்ற/நேரடி நியமனம் பெற்ற ஆய்வக உதவியாளர்கள் அடுத்தக்கட்ட பதவி உயர்வு இல்லாமல் பணி ஓய்வு பெறும் வரை ஆய்வக உதவியாளர்களே பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொடர் கோரிக்கைகள் விடுத்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு பணிநிலையில் பணிபுரிபவர்களுக்கும் அவர்கள் பெற்றுள்ள கல்வித்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு பெறுவதற்கான பணிநிலைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படை உரிமையை கருத்தில் கொண்டும் அரசளவில் பரிசீலித்து ஆய்வக உதவியாளர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகள், விதி 3(g)(i)னை தளர்வு செய்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல் (Recruitment of Transfer) ஆணை வழங்கிடவும் அளிக்க இயலாத நிலையில், ஆய்வக அவ்வாறு விதித் தளர்வு உதவியாளர்களில் பெரும்பாலான பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி உடையவர்களாக இருப்பதால், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் அரசாணை (நிலை) எண்.13, பள்ளிக் கல்வித் துறை, நாள்.30.01.2020ன்படி விதி 2 நியமனமுறை (Rule 2-Appointment)யில் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கப்படும் 50 சதவீத காலிப்பணியிடங்களில் இருந்து 10 சதவிகித பணியிடங்களை ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஒத்த ஊதியத்தில் அமைந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது போன்று ஆய்வக உதவியாளர்களுக்கு 2 சதவிகித ஒதுக்கீடு வழங்கினால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வில் பங்கு பெற்றும், இனச்சுழற்சி உள்ளிட்ட இதர நடைமுறைகளை பின்பற்றியும் பட்டதாரி ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற வழிவகை ஏற்படுத்தலாம்.

எனவே மேற்கண்டவாறு ஆய்வக உதவியாளர்களுக்கு பணி மாறுதல் மற்றும் 2 சதவிகித ஒதுக்கீடு வழங்கிடவும் கருத்துரு அரசுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DSE - Promotion to Lab Assistant Letter PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.