7979 SSA BT Asst. Posts 3 Months Pay Continuance Order Published
2006-2007 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7.979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 1.04.2021 முதல் 31.03.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது. 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குநரால் தற்காலிக தொடர் நீட்டிப்பு ( Express Pay Order ) வெளியிடப்பட்டு முடிவடைந்துவிட்டது தற்போது 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை Authorization ) வெளியீடு.
பள்ளிக்கல்வி 2006 -2007 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது -
இப்பணியிடங்களுக்கு 1.04.2021 முதல் 31.03.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குநரால் தற்காலிக தொடர் நீட்டிப்பு (Express Pay Order) வெளியிடப்பட்டு முடிவடைந்துவிட்டது 01.07.2024 தற்போது 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் -சார்பு. 1 - முதல் அரசாணை (நிலை) எண்.175, பள்ளிக்கல்வி (சி2)த்துறை, நாள்.18.09.2006.
2. அரசாணை (1டி) எண்.139, பள்ளிக் கல்வி பக5(1)துறை, நாள்.23.08.2021.
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் செய்ல்முறை ந.க. எண். 011658 /எல்/இ3/2021, நாள்.11.03.2024.
4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித இ3/2021, நாள்.02.07.2024.
ந.க.எண்.011658/எல்
பார்வை 1-இல் காணும் அரசாணையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதப்படி 7979 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டது பார்வை 2-இல் காணும் அரசாணையில் இத்தற்காலிக 7,979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது.
பார்வை 3 -இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order) வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில் 01.07.2024 முதல் 31.12.2024 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். 2. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேற்குறிப்பிட்டுள்ள 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதி(சம்பளம்)த் துறை, நாள். 22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வின்படிவெளியிடப்படுகிறது.
நகல்
பள்ளிக்கல்வி இயக்குநர், சென்னை-6 CLICK HERE TO DOWNLOAD 7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay Continuance Order PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.