1231 துப்புரவுப் பணியாளர் & இரவுக் காவலர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
1231 துப்புரவுப் பணியாளர் & இரவுக் காவலர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது பணியில் ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக மீதமுள்ள 1231 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்கக் கோருதல் - தொடர்பாக. அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது பணியில் ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக மீதமுள்ள 1231 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்கக் கோருதல் - தொடர்பாக.
1. அரசாணை (நிலை) எண்.47. பள்ளிக் கல்வி (ஆர்.1) துறை, நாள் 02.03.2012.
2. அரசாணை (1டி) எண்.120. பள்ளிக் கல்வி ப.க.4(2))த் துறை, நாள் 03.08.2021.
3. அரசு கடித 30.04.2024 எண்.3580/ப.க.4(1)/2024-1. நாள்
4. பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண்.000608/ எல்/இ3/2021. நாள் 02.07.2024. பார்வை 1-ல் காணும் அரசாணையில், மாணவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக உள்ள 998 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவாளர் பணியிடம் வீதம் ரூ.1300-3000 + ரூ.300 தர ஊதியம் என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் 998 துப்புரவாளர் பணியிடங்களும், மாணவர்களின் எண்ணிக்கை 500-க்கு மேலாக உள்ள 996 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 1005 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவாளர் பணியிடம் வீதம் ரூ.1300-3000 + ரூ.300/- தர ஊதியம்
என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் 2999 துப்புரவாளர் பணியிடங்களும் மற்றும் தலா ஒரு காவலர் பணியிடம் வீதம் ரூ.4800-10000 + ரூ.1300/- தர ஊதியம் என்ற காலமுறை ஊதிய விகிதத்தில் 2001 காவலர் பணியிடங்களும் ஆக மொத்தம் 5000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. பார்வை இரண்டில் காணும் அரசாணையில், 774 துப்புரவாளர் மற்றும் 470 இரவுக் காவலர் ஆக மொத்தம் 1244 பணியாளர்களது பணியிடங்களுக்கு மட்டும் 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்று ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த நிதித்துறையால் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 3. பார்வை மூன்றில் காணும் அரசு கடிதத்தில், நாளது தேதியில் பணியில் ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக மீதமுள்ள 458 இரவுக் காவலர்கள் மற்றும் 773 துப்புரவாளர்கள் ஆக மொத்தம் 1231 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.04.2024 முதல் 30.06.2024 வரையிலான மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorisation) வழங்கப்பட்டுள்ளது.
4. தற்போது, பள்ளிக் கல்வி இயக்குநர் தமது கடிதத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தி, தோற்றுவிக்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் ஆக மொத்தம் 5000 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களில், பணியில் ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக மீதமுள்ள 1244 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 31.12.2023 வரை அரசால் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளது தேதியில் பணியில் ஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக மீதமுள்ள 458 இரவுக் காவலர்கள் மற்றும் 773 துப்புரவாளர்கள் ஆக மொத்தம் 1231 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 முடிய தொடர் நீட்டிப்பு முதல் செய்து ஆணை வழங்கப்பட்டு முடிவடைந்ததால். 01.01.2024 கொடுப்பாணை 30.06.2024 மாதத்திற்கு ஊதியக் மூன்று வரை (Pay Authorisation) வழங்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் 01.07.2024 முதல் 31.12.2024 வரை ஆறு மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorisation) வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 5. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மேற்குறிப்பிட்டுள்ள 1231 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்பட்டு முடிவைடைந்துள்ள நிலையில், மேற்குறிப்பிட்டுள்ள 1231 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.2024 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorisation) வழங்கப்படுகிறது.
மேற்படி அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இக்கடிதம் 6.
அரசாணை எண்.334, நிதி
(BG-I)த் துறை,
நாள் 22.10.2022-இன்படி நிதித்துறையிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை. CLICK HERE TO DOWNLOAD 1231 Non Teaching Posts Scavanger & Watch man Posts July 2024 to Sep 2024 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.