PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 30, 2024

PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள்



PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள்

2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பொருள்: கல்வி - 2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் - சார்ந்து.

பார்வை: மாநிலப் பொதுக்குழுக்கூட்ட தீர்மானம் எண்.13.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரைத் துணைத்தலைவர்களாகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தினுள் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/மேல்நிலை/ மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்புக்கட்டணத் தொகையினை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று பெறப்பட்டத் தொகையை ஒரே வங்கி வரைவாக தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அனைத்து வகைப் பள்ளிகளிலிருந்து பெறப்படும் இணைப்புக் கட்டணத் தொகையை 01.04.2024 முதல் கீழ்க்கண்டவாறு பெறுவதற்கு பார்வையில் காணும் தலைவர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின்கீழுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து கீழ்க்கண்டவாறு 2024-2025ல் மறுநிர்ணயம் செய்யப்பட்ட இணைப்புக்கட்டணத் தொகையினை பெற்று சென்னையில் மாற்றதக்க លសំ (Payable at Chennai) "The Secretary & Treasurer, Tamilnadu State Parent Teacher Association, Chennai-6" என்ற முகவரிக்கு ஒரே வங்கி வரைவாக எடுத்து 20.07.2024-க்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD DEE செயல்முறைகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.