296 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் ஊதியக் கொடுப்பாணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 11, 2024

296 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.3296 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் ஊதியக் கொடுப்பாணை வெளியீடு. Release of continuous pay for 3 months for 296 temporary posts.

3296 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.Ms.No.46, Date:01.03.2011 - KH தலைப்பு) 01.06.2024 முதல் 3 மாதங்களுக்கு தொடர் ஊதியக் கொடுப்பாணை!

பார்வை 1 மற்றும் 2-இல் காணும் அரசாணைகளில் 2009-2010 மற்றும் 2011-2012 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, அரசு / நகராட்சி / மாநகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 2064 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 344 உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 544 ஆய்வக உதவியாளர் மற்றும் 344 இளநிலை உதவியாளர் ஆக மொத்தம் 3296 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

2. பார்வை 3-ல் காணும் அரசாணையில் 2064 பட்டதாரி ஆசிரியர், 344 உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 544 ஆய்வக உதவியாளர் மற்றும் 344 இளநிலை உதவியாளர் ஆக மொத்தம் 3296 தற்காலிக பணியிடங்களுக்கு 29.02.2024 வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 3. பார்வை 4-ல் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மூலம் 01.03.2024 முதல் 31.05.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பாணை (Express Pay Order) வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து, இப்பணியிடங்களுக்கு 01.06.2024 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, மேற்குறிப்பிட்டுள்ள 3296 தற்காலிக பணியிடங்களுக்கு 01.06.2024 முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஜுன் 2024 முதல் ஆகஸ்ட் முடிய மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD BT. 2064+PET 344+J.A 344+Lab Asst. 544=3296 posts Pay Order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.