நாளை காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய உறுதிமொழி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 11, 2024

நாளை காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய உறுதிமொழிநாளை காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய உறுதிமொழி

ஜூன் -12 | குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி June -12 | Pledge to eliminate child labor

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் -12

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஜூன் -12 ஆம் தேதி 11 மணி அளவில் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும்...


குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.