பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் புதிய கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 1, 2024

பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் புதிய கோரிக்கை!பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் புதிய கோரிக்கை!

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் முடிவடையும் தருவாய் என்றாலும், வெயிலின் தாக்கம் முடிந்தபாடில்லை. இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தை கருத்திற்கொண்டு பள்ளிகள் திறப்பை ஒவ்வொரு மாநில அரசும் தாமதப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன் ஜூன் 6 ஆக இருந்து பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 10 என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை மேலும் தள்ளிவைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் பள்ளிகள் திறப்பை ஜூன் 10ல் இருந்து ஜூன் 3ம் வாரத்திற்கு மற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் 10-12ல் பள்ளிகள் திறக்கப்படுவதால் தமிழகத்தில் இந்த தேதியின் மீது கோரிக்கைகள் வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.