DSE - IFHRMS Salary Issue - நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 4, 2026

DSE - IFHRMS Salary Issue - நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - The Director of School Education has ordered the compilation and submission of details regarding the continuation of permanent posts as temporary posts in IFHRMS!

பார்வை:

நிரந்தரமாக்கப்பட்டது

தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல் தொடர்பாக

அரசாணை(நிலை) எண்: 157, பள்ளிக் கல்வித்(பக5(1))துறை, நாள்: 05.09.2019.

அரசாணை(நிலை) எண்: 19, பள்ளிக் கல்வித்(பக5(1))துறை, நாள்: 27.01.2025.

3. அரசாணை(நிலை) எண்: 215, பள்ளிக் கல்வித்(பக5(1))துறை, நாள்: 23.09.2025.

பார்வையில் காணும் அரசாணைகளின்மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

பார்வை 1 இல் காணும் அரசாணையின்படி 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது. அதில் சிலர் மட்டும் நிரந்தர பணியிடத்திற்காக உள்ளீடு செய்யாமல், தற்காலிகம் எனக் குறிப்பிட்டதினால் ஊதிய பெற இயலாத நிலை உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

பார்வை 2 இல் காணும் அரசாணையின்படி பள்ளிக்கல்வி இயக்ககத்தில் ஆசிரியர் மற்றும் கீழுள்ள ஆசிரியர் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்பட்டு, அதனைத்தொடர்ந்து, இவ்வரசாணைக்கு பார்வை 3 இல் காணும் அரசாணை(நிலை) எண்: 215, பள்ளிக் கல்வித்(பக5(1)துறை, நாள்: 23.09.2025, அரசாணையின்படி திருத்தம் மேற்கொண்டு திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதிலும் சிலர் மட்டும் நிரந்தர பணியிடத்திற்காக உள்ளீடு செய்யாமல், தற்காலிகம் எனக் குறிப்பிட்டதினால் ஊதிய பெற இயலாத நிலை உள்ளது எனத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. எனவே, மேற்கண்ட அரசாணைகளின்படி நிரந்தரமாக்கப்பட்ட பணியிடங்கள் IFHRMS இல் நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிகமாகவே தொடரும் பணியிடங்களின் விவரங்களையும் மற்றும் இவ்விரு அரசாணைகளுக்கு முன்னரே நிரந்தர பணியிடம் வழங்கப்பட்டு அப்பணியிடங்கள் IFHRMS இல் தற்காலிகமாக இருப்பின் அதன் விவரங்களும் இச்செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்ந்த பள்ளிகளிடமிருந்தும் மற்றும் அலுவலகங்களிடமிருந்து பெற்று இச்செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி இணைப்பில் உள்ள படிவத்தில் தொகுத்து கருத்துருவினை தயார் செய்து வைத்துக் கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் கருத்துருக்கள் இயக்குநர் நிலையில் முகாம் நடத்தப்பட்டு, கருத்துருக்கள் ஆய்வு செய்து உரிய அரசாணையில் IFHRMS பதிவுகள் மேற்கொள்ளப்படும். மேலும், இம்முகாம் நடத்தப்படும் நாட்களுக்குள் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் மேற்காண் உள்ளவாறு IFHRMS தவறாக உள்ளீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் விவரங்களை விடுபடாமல் முழுமையாக தொகுத்து, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் நாளன்று கொண்டுவருமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், முகாம் முடிவடைந்த பின் பெறப்படும் கருத்துருக்களுக்கு ஊதிய வழங்க இயலாத நிலை ஏற்படின் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பு ஏற்கப்பட நேரிடும் என்றும் அவ்வாறு நிகழும் பட்சத்தில் சார்ந்த அலுவலர்களின் மீது துறையால் தக்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும், திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. படிவம் நிரப்புவதற்கான நிபந்தனைகள்

1. நிரந்தரப்பணியிடம் என்று கோரப்படும் பணியிடம் கண்டிப்பாக நிரந்தரமாக்கப்பட்ட அரசாணையில் இடம்பெற்றுருப்பதை உறுதி செய்த பின்னரே படிவத்தை நிரப்பப்பட வேண்டும்.

2.இப்பணியிடங்களை முதன்முதலாக அனுமதிக்கப்பட்ட / தோற்றுவிக்கப்பட்ட அரசாணையினை சரிபார்த்த பின்னரே படிவத்தை நிரப்ப வேண்டும்.

மேலும் உரிய அரசாணை நகலை கருத்துருவில் இணைக்கப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு அலுவலகத்திலும் / பள்ளியிலும் உள்ள அளவுகோல் பதிவேடில் (Scale Register) பதிவு மேற்கொள்ளப்பட்ட அரசாணை எண்ணினை சரிபார்த்த பின்னரே படிவத்தை நிரப்ப வேண்டும்.

4. படிவத்தை நிரப்பும்போது பதவிவாரியாக Position ID உடன் நிரப்ப வேண்டும்.

(பள்ளி /அலுவலக வாரியாக நிரப்புதல் கூடாது).

படிவத்தில் உள்ள கலங்களை பூர்த்தி செய்ய சரிபார்க்கப்பட்டவைகளான, சார்ந்த பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அரசாணைகள், GTN Report, Scale Register, தொடர் நீட்டிப்பு ஆணை ஆகியவற்றின் நகல்கள் சார்ந்த முதன்மைக் கல்வி கண்டிப்பாக அலுவலகத்தில் பெற்று வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை முன்மொழிந்து கீழ்கண்டவாறு இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்தும் மற்றும் இணைப்பில் உள்ள சான்றினை சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கையொப்பமிட்டும் 20.03.2026 க்குள் கண்டிப்பாக தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை, முகாம் நடைபெறும் நாளன்று எடுத்து வர வேண்டும்.முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இணைப்பு-பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம், சான்று மற்றும் பார்வையில்கண்ட பெறுநர்

அரசாணைகளின் நகல்கள் கர 02/03/2026 பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டம்.

நகல்

1. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை - 06 (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது)

2. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை - 06 (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது)

3. இயக்குநர்,மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06 (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது)

4. நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை - 06.

5. இணை இயக்குநர்,(மேல்நிலைக் கல்வி), பள்ளிக் கல்விஇயக்ககம், சென்னை - 06.

6. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி), பள்ளிக் கல்விஇயக்ககம், சென்னை - 06.

7. இணை இயக்குநர் (தொழிற்கல்வி), பள்ளிக் கல்விஇயக்ககம், சென்னை -06. 8. இணை இயக்குநர் (இடைநிலை), பள்ளிக் கல்விஇயக்ககம், சென்னை - 06. 9. இவ்வியக்கக அனைத்து பிரிவிற்கு (மின்னஞ்சல் மூலமாக).

சான்று

பள்ளிக்கல்வி இயக்ககத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாணைகள் அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

2. அதில் சில பணியிடங்கள் தற்காலிகமாகவே IFHRMS இல் தொடர்ந்து வரும் நிலையில் அப்பணியிடங்களை உரிய அளவைப் பதிவேடுகள் மற்றும் பள்ளியிலிருந்து பெற்று சரிபார்க்கப்பட்டு நிரந்தர அரசாணைகளை பணியிடமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3. இவற்றைத் தவிர்த்து ஏதேனும் தகுதியுடைய பணியிடங்கள் சமர்ப்பிக்க தவறினால் அதற்கான பொறுப்பு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரேயே சாரும் என இதன் மூலம் உறுதியளிக்கப்படுகிறது.

4. இப்பணிகள் முடிவடைந்தபிறகு இனிவரும் காலங்களில் நிரந்தரமாக்கப்பட்ட பணியிடங்கள் தற்காலிகம் என காணப்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பாவர் என இதன் மூலம் உறுதியளிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்

CLICK HERE TO DOWNLOAD DSE - IFHRMS Salary Issue PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.