பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 25, 2024

பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு.



பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு. The director ordered to release the teachers who were transferred.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 11.1.2024 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு ஆதிதிராவிட நல இயக்குனர் உத்தரவு. ஆசிரியர் பணியமைப்பு கல்வி பள்ளிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்கள் காப்பாளர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் காப்பாளர்கள் பணியேற்பு செய்வது தொடர்பாக.

பார்வை

1 அரசு கடிதம் (நிலை) எண். 78-ஆதிந7/2023, நாள் 26.06.2023

2. அரசு கடிதம் (நிலை) எண். 94.ஆதிந7/2023, நாள் 24.07.2023

3. ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க. எண்.ஒ118553 2023, நாள்.11.012024.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் காப்பாளர்களுக்கு 11012024 அன்று நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வில் பணியிடமாறுதல் பெற்றவர்களுக்கு கல்வியாண்டின் பொதுத்தேர்வு காரணமாக மாணவர்களின் கல்வி நலன் கருதி புதிய பணியிடத்தில் பணியேற்பு செய்ய பணிவிடுவிப்பு செய்யாமல் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் புதிய பணியிடத்தில் பணியேற்கும் வகையில் கலந்தாய்வில் பணியிட மாறுதல்கள் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்/ தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்-த.ஆனந்தி,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.