சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் ₹14,000த்தில் இருந்து ₹18,000ஆக உயர்வு.
2024-25 நிதியாண்டில் திட்டத்திற்கு ₹21.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு.
ஊதிய உயர்வால் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் 1,009 பேர் பயனடைவார்கள் தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.