தமிழகம் முழுவதும் 900 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 25, 2024

தமிழகம் முழுவதும் 900 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்?



தமிழகம் முழுவதும் 900 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்?

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஜுன் 2 வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ள. 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருவதால் தலைமை ஆசிரியர் இல்லாமல் இந்தப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் விரைந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன! உடனே நியமிக்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் உள்ளபள்ளி களில் 900 தலைமை ஆசிரி யர்பணியிடங்கள்காலியாக உள்ளன என தெரிய வந்துள் ளது. எனவே உடனே நிய மிக்க வேண்டும் என்று ஆசி ரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்விதுறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ,மாணவிகள்படித்து வருகின்றனர்.கடந்த 2013- 2014ஆம் கல்வி ஆண்டுக்கு பிறகு, தமிழ் நாடு அரசால் இடைநிலை ஆசிரியர்பணி நியமனம் மேற் கொள்ளப்ப டவில்லை. இதனால், மாண வர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது தொடக்க, நடுநிலைப் பள் ளிகளில் இடைநிலைஆசிரி யர் காலி பணியிடங்கள் இருந்தன.

இவற்றை சமா ளிக்கதொகுப்புஊதியத்தில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்க ளுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள்மேற்கொள்ளப்படு கின்றன. இந்தநிலையில் நீதிமன்ற வழக்குகள்நிலுவையில்உள் ளதால், மாநிலம் முழுவதும் உள்ளஅரசுஉயர்நிலைப்பள் விகளில்சுமார் 900தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதைய டுத்து, உயர்நிலைப்பள்ளிக வில் உள்ள பட்டதாரி ஆசி ரியர்கள், காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கவேண்டும்என்றுபள் ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பல ஆசிரியர்கள் 20 ஆண்டு களுக்கும் மேலாக பதவி உயர்வுக்காககாத்திருக்கிறார் சுள். அவர்கள் ஓய்வு பெற இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.