மார்ச் மாதம் 46% அகவிலைப் படியிலேயே ஊதியம்.
ஏப்ரல் முதல் 50% அகவிலைப் படியில் ஊதியம்
ஏப்ரல் முதல் வாரத்தில் 3 மாத அரியர்.
-அரசாணைப்படி.
4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் , அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி , அனுமதித்து அரசு ஆணையிடுகிறது
நிதி (படிகள்)த் துறை
அரசாணை (நிலை) எண். 132, நாள்: 12-03-2024.
(மாசி - 29, திருவள்ளுவர் ஆண்டு 2055)
அகவிலைப்படி
-
சுருக்கம்
01-01-2024 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி
வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
பின்வருவனவற்றைப் படிக்கவும்:-
அரசாணை (நிலை) 6T600т.310, நிதி (படிகள்)த் துறை, நாள். 27-10-2023.
ஆணை:
மேலே படிக்கப்பட்டுள்ள அரசாணையில் கீழே குறிப்பிட்டுள்ளபடி, மாநில அரசு அலுவலர்களுக்கு திருத்தப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது:-
எந்நாளிலிருந்து
வழங்கத்தக்கது [1]
01-07-2023
திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம்
[மாதம்ஒன்றுக்கு]
[2]
அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதம்
2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி, அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.
எந்நாளிலிருந்து வழங்கத்தக்கது [1]
01-01-2024
திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம்
[மாதம்ஒன்றுக்கு]
[2]
அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம்
3. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும். அதுவே, 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும்.
4. மேலே அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர பணியாளர்களுக்கும், சில்லரைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு
நேர
த.பி.பா.
2
அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும்.
இந்த
ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.
5. இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு/ அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் / உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள் ஆகியோருக்கும், ஊதிய அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் / எழுத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பொருந்தும்.
6. இச்செலவு, சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்பின் பெருந்தலைப்பு, துணைப் பெருந்தலைப்பு, சிறு தலைப்பின் கீழ்வரும் "303. அகவிலைப்படி" என்ற நுணுக்கத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.
7. மேலே பத்தி 2 இல் ஒப்பளிக்கப்பட்ட திருத்திய அகவிலைப்படி நிலுவைப்பட்டியல் சமர்பிப்பது தொடர்பாக சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட ஆணையர், கருவூலக் கணக்குத் துறை, சென்னை கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
8. இதற்கான பட்டியல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குமாறு கருவூல அலுவலர்கள் / சம்பளக் கணக்கு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
.
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.132, Fin (All) Dt.12.03.2024 D.A - Tamil PDF
Wednesday, March 13, 2024
New
அரசுப் பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132 நாள்: 12-03-2024
G.O
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.