29.02.2024ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள் Employment Exchange Statistics - Live Register status as on 29th February 2024 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 13, 2024

29.02.2024ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள் Employment Exchange Statistics - Live Register status as on 29th February 2024 - PDF



29.02.2024ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள் Employment Exchange Statistics - Live Register status as on 29th February 2024 - PDF

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை தற்போது வரை எவ்வளவு? தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 54,81,564 ஆகும். அதில், ஆண்கள் 25,26,487 பேரும், பெண்கள் 29,54,,792 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 285. இந்த எண்ணிக்கையில், வயது வாரியாக பதிவுதாரா்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் 11,495 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 24,12,771 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17,21,980 பேரும் உள்ளனா். 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2,39,391 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் முடித்து தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, இப்போதிருக்கும் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். CLICK HERE TO DOWNLOAD 29.02.2024ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.