நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் Jacto-Jio employees strike called off tomorrow - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 14, 2024

நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் Jacto-Jio employees strike called off tomorrow

நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்து இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பு முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களின் உரிமைகளுக்காக ஜாக்டோ ஜியோ இயக்கம் நெடுங்காலமாக போராடி வருகிறது-தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன்.

முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு.

நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோவின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது . சம வேலைக்கு சம ஊதியம் , பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார் . முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து , போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது


CLICK HERE TO DOWNLOAD Jactto Geo Press Release 14.02.24 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.