Appointment of special officers to monitor public examination proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 4, 2024

Appointment of special officers to monitor public examination proceedings



பொதுத் தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை, பிப்.4:பொதுத் தேர்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு அதிகாரி களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாண வர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4-ஆம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ம 5 / 12 தேதியும் தேர்வு தொடங்க உள்ளது.

இந்த நிலையில், பொதுத் தேர்வுகளைக் கண்கா ணிக்க ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித் துறையின் அரசு தேர்வுத் துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பொதுத் தேர்வு பணிகளைக் கண்காணிக்கவும், மேற்பார்வையிட வும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்கள், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவ னம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகா ரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செய லாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள் ளார்.

இதில் சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீ வெங்கடப் பிரியாவும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கு நர் ஆர்த்தியும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஆசி ரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமாவும், வேலூர் மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பனும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் பழனிசாமியும், மதுரை மாவட்டத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகனும் என மொத் தம் 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.