1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 13, 2024

1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை



1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை 1988..ல்...

அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டீ (Confederation ) பேரமைப்பு சார்பாக

22-06-1988 முதல் 23-07-1988 வரை

31 நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. 40 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாநில அளவிலான தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலை நிறுத்தத்தின் உச்சகட்டமாக சென்னை முற்றுகை அறிவிக்கப்பட்டது.

வேன் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலேயே கைது செய்யப்பட்டு மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர்.

காவல்துறையின் தடையை மீறி சென்னை எழும்பூர் சென்டரல், பாரிமுனைக்கு அரசு ஊழியர் ஆசிரியர்கள் வந்தனர்.

வேஷ்டி உடுத்தியவர்கள் ஆசிரியர்கள் பேன்ட் சட்டை போட்டவர்கள் அரசு ஊழியர்கள் என சந்தேகப்பட்டவர்களை எல்லாம் காவல்துறை கைது செய்தது.

ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும்

காவல்துறை கைது செய்கிறது... எனவே, கூட்டமாக செல்லாதீர்கள் ...

பேனர் பிடிக்காதீர்கள்.,

கொடி பிடிக்காதீர்கள்..,

கோசம் போடாதீர்கள்

என தோழமைச் சங்க தலைவர்கள் ரகசியமாக தகவல்களை பகிர்ந்து சென்றனர்.

காவல் துறையின் அனைத்து தடைகளையும் மீறி சென்னை அண்ணாசாலையில் 22 -7 - 1988 அன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தலைவர் யார் ? தொண்டர் யார்? என்று யாருக்கும் தெரியாது.

போராட்ட கோசங்கள் மட்டுமே அனைவரையும் இணைத்தது.

யாரும் கலைந்து செல்லவில்லை.

கைது செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முடியாததால் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது.

ஆசிரியர் சங்க தலைவர் வீரையன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டதால்

மண்டை உடைந்து ரத்தம் ஆறாக ஓடியது.

போராட்ட வீரர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியது.

கண்ணீர் புகை குண்டு

ஈரத் துண்டால் பிடிக்கப்பட்டு காவல்துறை மீது திருப்பி வீசப்பட்டது. குதிரைப் படை வீரர்கள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்தனர்.

குதிரைப் படை தாக்குதலை எதிர்கொண்டு குதிரைப் படை திருப்பி குதிரை லாயத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது.

கூட்டத்தை கலைக்க முடியாமல் தோல்வி கண்ட அன்றைய ஆளுநர் அரசு சென்னை சிறையில் இருந்து மாநிலத் தலைவர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமரச தீர்வை உருவாக்கியது.

பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால்...

முற்றுகையை கைவிட்டு கலைந்து நேரு ஸ்டேடியம் செல்லுமாறு காவல்துறை முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் அறிவித்தது.

காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது..,

எங்கள் சங்க தலைவர்கள் நேரில் வந்து சொன்னால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர்.

வேறு வழியில்லாமல் காவல்துறையினர் தோழர். M.R.அப்பன் அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர்.

காவல்துறை வாகனத்தின் மேலே ஏறி நின்று காவல்துறை ஒலிபெருக்கியில் M.R. அப்பன் அவர்கள்

முற்றுகையில்

ஈடுபட்டபவர்களிடம் பேசினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது...,

அனைவரும்

நேரு ஸ்டேடியம் வாருங்கள் பேசுவோம் என்று அறிவித்தார்.

M.R. அப்பன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முற்றுகையை கைவிட்டு நடை பயணமாக நேரு ஸ்டேடியம் சென்றனர். அரசு செலவில் நேரு ஸ்டேடியத்தில் பேச்சுவார்த்தை ஒப்பந்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கொள்கை அளவில் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது...

அதனால் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம் என்று மாநிலத் தலைமை அறிவித்தது.

வேலைநிறுத்தத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றோம்

😡😡😡😡😡😡😡😡

அனுபவவே

நல்ல ஆசான்



😡😡😡😡😡😡😡😡

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.