இடைநிலை ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 25, 2024

இடைநிலை ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை



A request to the Chief Minister, School Education Minister to call the secondary teachers for a dialogue and end the protest - இடைநிலை ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி ~~

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் - கோரிக்கை கடந்த 19ம் தேதி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 2009ம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ,அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர், அதாவது ஒரு கட்டுமான பணிக்கு பத்து தொழிலாளர்கள் தேவை என்ற பட்சத்தில் பணியில் அமர்த்திய நிலையில் பத்து தொழிலாளர்கள் போதாத நிலை ஏற்பட்டு மேலும் ஐந்து தொழிலாளர்கள் நியமிக்கட்டு முதல் நாள் பணியில் சேர்ந்த பத்து தொழிலாளர்களுக்கு ஒருநாள் ரூ. 500ம் அடுத்தநாள் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஐயந்து தொழிலாளர்களுக்கு ரூ . 400 ம் வழங்கினால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எதே நிலையில் தான் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிவருகிறார்கள் ,

போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் , அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை பெருமையின் அடையாளம் என சூளுரைத்து அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விஞ்சிகின்ற அளவிற்கு மேம்படுத்திவரும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், மேலும் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருதல் கொரோனா காலத்தில் சென்ற ஆட்சியாளர்களால் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தங்களை விட்டால் அரசு ஊழியர்களுக்கு யார் செய்வார்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறு உருவம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.