G.O 210 & 213 - நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோருதல் - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 20, 2023

G.O 210 & 213 - நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோருதல் - Director Proceedings



Case against Ordinance No: 210 and 213! Revised Pay Details Request Process! - அரசாணைஎண்: 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் செயல்முறை!

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006. 15.5.στ σποτ.013339/3/2019. г. 19.11.2023

பொருள்:

தொடக்கக் கல்வி வழக்கு இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அரசாணை (நிலை) எண்.210. பள்ளிக் கல்வி (ஜி1)த் துறை, நாள்.14.08.2009-ன்படி பலன்களை நீட்டித்து வழங்கக் கோரி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 10.11.2023-ல் அனுமதிக்கப்பட்டது.

மனுதாரர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை பெற்று வழங்கப்பட்ட விவரம் திருத்திய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு மாநில கணக்காயருக்கு ஓய்வூதிய பலன்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் கோரல்- சார்ந்து. பார்வை:

1 कर्क ला46 στ. 22615/ ब्क्रा.क. 1(1)/2021-4, बी. 11.08.2022

2. சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்குகள் W.A.No.34 of 2017 (45 1816 of 2017 भाजीशाळा வழக்குகளின் ஒருங்கிணைந்த தீர்ப்பாணை நாள்.03.01.2019.

3. சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்குகள் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்குகள் W.A.No.73 of 2016 फक्र 543 of 2019 भाजी ஒருங்கிணைந்த தீர்ப்பாணை நாள்.26.03.2019.

4. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மேல்முறையீட்டு வழக்கு எண்.208 of 2018 உடன் இணைக்கப்பட்ட ஏனைய வழக்குகளின் பொதுத் தீர்ப்பாணை நாள்.26.02.2021.

5. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற भीपंप एक नका. 435, 1398 of 2021 1355 طررره of 2022.

6. அரசாணை (நிலை) எண்.213 பள்ளிக் கல்வித் (தொ.க.1(1)) துறை d. 02.12.2022.

மேற்காண் பொருள் சார்ந்து இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அரசாணை (நிலை) எண் 210. பள்ளிக் கல்வி (ஜி1)த் துறை, நாள்.14.08.2009 ன்படி பலன்களை நீட்டித்து வழங்கக் கோரி மனுதாரர்களால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் 10.11.2023-ல் அனுமதிக்கப்பட்டது.

மனுதாரர்களுக்கு பார்வை 6-ல் காணும் அரசாணை (நிலை) எண்.213 பள்ளிக் கல்வித் (தொ.க.(1)) துறை நாள்.02.12.2022-ன்படி திருத்திய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை பெற்று வழங்கப்பட்ட விவரம். மாநில கணக்காயருக்கு ஓய்வூதிய பலன்கள் அனுமதிக்க அனுப்பப்பட்ட விவரத்தினை 23.11.2023 அன்று நீதிமன்றத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சார்ந்த அலுவலர்கள் சுணக்கமின்றி விரைவாக போர்க்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மனுதாரர் விடுதலின்றி நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (Ms Excel) படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஒப்பத்துடன் 2 நகல்களில் தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களிடம் 21.11.2023 அன்று மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) பிரிவு கண்காணிப்பாளர் / அலுவலர் மூலம் நேரில் சமர்பிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசாணை (நிலை) எண்:151 பள்ளிக் கல்வி (ப.க1(1)) துறை நாள்.09.09.2022ன்படி சார்நிலை அலுவலகங்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு (தொடக்கக் கல்வி) வழக்கு சார்ந்த கோப்புகள் மற்றும் பணிப்பதிவேடுகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளது அறியவருகிறது, அவ்வாறு உள்ள கோப்புகளை உடன் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (தொடக்கக் கல்வி) ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட வழக்குகள் சார்ந்த பணிகள் தொடக்கக் கல்வி இயக்குநரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) இதில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுமாறும், இதில் காலதாமதம் ஏதும் கண்டறியப்பட்டால் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுவதுடன் தேவையற்ற தெளிவுரைகள் கோருவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு: படிவம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.