TET வழக்கு விபரம் சார்ந்த பதிவு - அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 20, 2023

TET வழக்கு விபரம் சார்ந்த பதிவு - அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி

TET வழக்கு விபரம் சார்ந்த பதிவு.... Next case hearing Dec-8

இன்று (20.11.2023) வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை

பதவி உயர்வுக்கு டெட் தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை

அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது

TET பதவி உயர்வு வழக்கு

இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது

வழக்கு dismiss செய்யப்படவில்லை

இடைக்கால தடை வழங்கப்படவில்லை

1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது

இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்

அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி வருகிறது...

*இயக்கத்தோழர்களே*!! *யாரும் பீதியடைய வேண்டாம்*!!!

**************************

இன்று (20-11-2023)

TETதொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு -வழக்கு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

(விசாரணைக்கு ஏற்றதுஅல்ல என்று கூறி மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விடவில்லை)

இதன் மீதான விசாரணை மிகக்குறுகிய காலத்திலேயே தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இன்றைய விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் TET--தீர்ப்புக்கு Stay வழங்கவில்லை என்பதால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

அடுத்த வரும் விசாரணையிலும் Stay வழங்குமாறு நாம் கேட்பதற்கும் உச்ச நீதிமன்றம் அதை வழங்குவதற்கும் வாய்ப்புக்கள் நிரம்ப உள்ளன.

உச்சநீதிமன்றத்தின் இந்த வழக்கில் நம்மை இணைத்துக்கொண்டு வழக்கை நடத்துவதற்கு தேவையான பணிகளை நமது சீனியர் வழக்குரைஞர் மதிப்பு மிகு திரு.*G. சங்கரன்*-அவர்கள் மூலம் மேற்கொண்டுள்ளோம் என்பதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம் 👍

அன்புடன்

அ.மாயவன்

நிறுவனத் தலைவர்.

**************************

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.