இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கம் ஆதரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கம் ஆதரவு!

தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கம் தேதி : 05.10.2023

பத்திரிக்கை செய்தி.

இரா.ஆசைதம்பி, M.A. B.Ed.,

சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். (குரல்.664).

வாக்குறுதிகளை அள்ளி வழங்குதல் எல்லாருக்கும் எளிது. சொல்லியவற்றுக்கு செயல் வடிவம் தந்து நிறைவேற்றுவது அரிதினும் அரிது.

1) பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்.

2) ஒரே பணியை இரு வேறு ஊதிய முரண்பாட்டுடன் செய்து வரும் ஆசிரியர்களை சமநிலைப்படுத்த வேண்டும்.

3) ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். என்பதாக தமிழக அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் தங்களின் குடும்பத்தாரோடு சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணா நிலையை அறப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்கு முறையை ஏவி விட்டு எமது ஆசிரியர்களை சிறைப்படுத்துவது என்பது நியாயமானது அன்று.

உரிய வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்களின் மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆசை வார்த்தைகளை கூறி எமது ஆசிரியர் பெருமக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு ஆசை காட்டி மோசம் செய்வதற்கு சமமான செயலை தற்போது செய்து வருகிறது. இது ஏற்கத்தக்கது அன்று.

இந்த அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக அதை தற்போது நிறைவேற்றி தருவதற்கு சொல்லும் காரணங்கள் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. உடனடியாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை எனவே தமிழ்நாடு அரசு நிறைவேற்றுவதோடு அவர்களை உடனடியாக விடுதலை செய்து குடும்பத்தாரோடு சேர்ந்து தங்களின் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.