போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் - தேமுதிக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் - தேமுதிக

ஆசிரியர்கள் கைது - கேப்டன் கண்டனம்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தமிழக அரசை கண்டிக்கிறேன்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரந்திற்காக போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும். கோரிக்கைகளை @CMOTamilnadu உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் தேமுதிக மாபெரும் போராட்டம் நடத்தும் , என்று தெரிவித்துக்கொள்கிறேன்.



அறவழியில் போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவது எந்த வகையில் நியாயம். தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு, அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இலவசங்களுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யும் திமுக அரசு, மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராதது ஏன்? பொய் வாக்குறுதிகளை அளித்து அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வரும் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களின் உரிமைக்காக போராடும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.