இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆதரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆதரவு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் Tamilnadu Rural Development Officials' Association - நாள்: 05.10.2023


நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் ஆசிரியர் மீதான

பத்திரிக்கை செய்தி

தமிழக அரசின் கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி கடந்த எட்டு நாட்களாக போராடி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை தமிழக அரசு ஏற்க மறுத்து சமவேலைக்கு சமஊதியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மூவர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாட்டினை அமல்படுத்த மறுக்கும் செயல்பாடாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கருதுகிறது. இத்தகைய குழு அமைக்கும் நடவடிக்கையினை கைவிட்டு போராடி வரும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமெனவும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீதான கைது தமிழக அரசின் கைது நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுகிறோம். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கி உரிய ஆணைகளைப் கமலும் பிறப்பிக்க தமிழக அரசை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.