உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 27, 2023

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை

What the Higher Education Incentive Court can do – an overview உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும்

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706 .

அரசாணை எண் 37 நாள் 10.03.2020 ன் படி உயர் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என்று அரசு Policy decision எடுத்துள்ளது .

அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 செயல்படுத்தல் சார்பானது . தெளிவாணைகள் பொதுவாக அரசு கடிதமாக வெளியிடப்படும் . அரசு கடிதங்களை எளிதாக நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியும் என்பதனால் அரசாணையாக வெளியிடப்பட்டது.

அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 க்கு effect 10 .03.2020 என்று வரையறுக்கப் பட்டது .

அரசாணை எண் 37 ன் படி /any recovery/ என்பதனால் 10.03.2020க்கு முன்பாக உயர் கல்வி தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது.

அரசாணை எண் 37 ன் படி 10 .03 .2020க்கு முன்பாக முடித்து /not Sanctioned / examined என்ற அடிப்படையில் தற்போது அரசாணை எண் 95 ன் படி one time lumpsum என்பதனை உறுதி செய்துள்ளது அரசு .

அரசாணை எண் 120 ன் படி மத்திய அரசின் வழிகாட்டுதலை கணக்கில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு One time lumpsum என்று அரசு முடிவு செய்துள்ளது. அரசாணை தான் கொள்கை முடிவு அல்ல.

உச்ச நீதிமன்றம் அரசாணையை முன் தேதியிட்டு நடைமுறைபடுத்துதல் சார்ந்து தீர்ப்புகள் வழங்கி உள்ளது . ஊக்க ஊதியம் ரத்து என்று அரசு கொள்கை முடிவு என்பதனால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும்.

வழக்கை இணைந்து நடத்தினால் தான் பயன் அளிக்கும். நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளோம்.

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706


அரசாணை டவுன்லோட் செய்ய

Tamil version - CLICK HERE TO DOWNLOAD PDF

English version - CLICK HERE TO DOWNLOAD PDF அரசாணை 37 நாள் 10/03/2020 இல் உள்ள பாரா 5-ஐ மேற்கோள்காட்டி அதன்படி ஊக்க உயர்வு கோரிய அனைத்து விண்ணப்பங்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தான் உள்ளது. அரசாணை 37 இல் பாரா 5-ல் சார்நிலை பணியாளர்களான ஆசிரியர்களை பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மாறாக அமைச்சுப் பணியாளர்களை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால் 10/03/2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு இந்த அரசாணை காட்டி ஊக்க ஊதிய உயர்வு தர மறுத்தால் நாம் நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு தொடுப்பதற்கு Legal Ground உள்ளது. மேலும் அரசாணை 37-ல் உள்ள பார்வையில் ஆசிரியர்களுக்கான ஊக்கு ஊதிய உயர்வு பற்றிய அரசாணைகளான 42/1968 1024/1991, 194/2006 மற்றும் 18/2013 ஆகிய ஏதும் இடம்பெறவில்லை. ஆகையால் யாரேனும் 10/03/2020க்கு முன்னர் உயர் கல்வி முடித்தவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற விரும்பினால் தாராளமாக நீதிமன்றத்தை அணுகலாம்.

நன்றி

தகவலுக்காக என்றென்றும்..... *எஸ்.கே.கண்ணன்* .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.