Chief Minister to end the protest of secondary teachers - இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 3, 2023

Chief Minister to end the protest of secondary teachers - இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

Tamil Nadu Teachers' Alliance appeals to the Chief Minister to end the protest of secondary teachers - இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வருக்கு வேண்டுகோள்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர், முன்னாள் மேலவை உறுப்பினர். 87 வயதிலும் ஆசிரியர் இனத்திற்காக சேவையாற்றும் ஆசிரியரினப்போராளி செமுத்துசாமி &MLC அவர்களின் கனிவான வேண்டுகோள். தங்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், தற்போதைய ஆட்சிக் காலத்திற்கான சட்டமன்றத் தேர்தலின் பொழுது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவேன் என தங்களால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி எண் 311 - சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்தீர்கள் அதனை நிறைவேற்றக்கோரி தற்பொழுது பேராசிரியர் அன்பழகன் (DP) வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், ஆறாம் நாளாக "இன்றைய எண்ணும் எழுத்தும்" பயிற்சியை புறக்கணித்து போராடி வருகிறார்கள். இத்தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 217 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி பெற வேண்டிய சூழல்

ஏற்பட்டுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இன்று முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சியும், இரண்டாம் பருவ பள்ளி திறப்பும் துவங்கியுள்ளது. மாணவர் கல்வி நலன் கருதி உடனடியாக முதல்வர் அவர்கள் இக்கோரிக்கையின்மீது கவனம் செலுத்தி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் அமலாக்கம் செய்யப்படும் என்பதை மார்ச் மாத பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே முன்கூட்டி அறிவித்ததைப் போன்று இக்கோரிக்கையை நிறைவேற்றப்படும் நாளினை குறித்தான அறிவிப்பு வெளியிட்டு வீதிக்கு வந்து போராடும் ஆசிரியர்களின் துயர் துடைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நான் ஏற்கனவே தங்களுக்கு 15-09-2023 அன்று எழுதிய வேண்டுகோள்

கடிதத்தில் கோரியவாறு அரசு ஊழியர் ஆசிரியர் நலன் எனும் தலைப்பில் தங்களால் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட தேர்தல் கால வாக்குறுதிகளான பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்

ஊதிய முரண்பாடுகள் களையப்படும்

* பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் தகுதித் தேர்வுக்கு பிறகு ஆசிரியர் நியமன தேர்வு நடத்தும் அரசாணை ரத்து செய்யப்படும் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நாளினை குறித்தான அறிவிப்பினை முதல்வர் அவர்கள் வெளியிட்டு ஆசிரியர்களிடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போராட்டச் சூழலை தவிர்த்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.