இன்று (அக்டோபர் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வரும் திட்டங்கள் விபரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 30, 2023

இன்று (அக்டோபர் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வரும் திட்டங்கள் விபரம்

(அக்டோபர் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வரும் திட்டங்கள் விபரம்

* 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது.

நிலம் வாங்கி பத்திரப் பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்.

வெளிநாடு செல்பவர்கள் ரூ.7 லட்சத்துக்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.

* வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். கட்டணம்.

* மியூச்சுவல்பண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.

டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.

பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்க ளுக்கு ஆதார் எண் கட்டாயம்.

* தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் டீசல் ஜென ரேட்டர்கள் இயக்குவதில் மாற்றியமைக்கப் பட்ட அட்டவணையை பின்பற்ற வேண்டும்.

பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை.

* அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.

* மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம்.

பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.