இன்று (அக்டோபர் 1) அனைத்து பள்ளிகளிலும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மத்திய கல்வி அமைச்சகம் - " துாய்மை சார்ந்த நிகழ்வுகள்" (Swachhta Hi Seva - Swach Bharath Diwas (SBD) - 2023) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடத்துதல் - சார்பு.
பார்வை
1. புது டெல்லி, மத்திய கல்வி அமைச்சகம், செயலர் அவர்கள் நேர்முக கடிதம் எண் எப்-28-3 / 2023 -IS-10 நாள் 13.09.2023.
2. சென்னை - 9, தலைமைச்செயலகம், பள்ளிக்கல்வித்துறை, இணை செயலர் அவர்கள் கடிதம் எண் 1210 / 2023 – GL 1 (2) /2023 நாள் 26.09.2023.
பார்வை 1 ல் குறிப்பிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி "துாய்மையான நிகழ்வுகள் " திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2023 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரையிலான பள்ளியில் நடத்திடும் நிகழ்வுகளை மத்திய கல்வி அமைச்சக வலைதள இணையத்தில் / இணைப்பில் (Google tracker or Google Drive) புகைப்படமாகவோ, ஒளிக்காட்சியாகவோ, வீடியோ படமாகவோ அல்லது அறிக்கையாகவோ பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 01 அன்று " Ek Tareekh Ek Ghanta " ஒரு முறை ஒரு மணி நேரம் என்ற தலைப்பின் கீழ் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வுகளை நடத்திட தெரிவிக்கப்படுகிறது. மேலும், அக்டோபர் 02 அன்று கீழ்க்குறிப்பிட்டவாறு நிகழ்வுகளை நடத்தி அதன் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. துாய்மை குறித்த சபதம் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
2. ஆசிரியர்கள் உதவியோடு பள்ளி மற்றும் தங்கும் விடுதிகள் குப்பைகள் சுத்தம் செய்தல்
3. பள்ளி மற்றும் தங்கும் விடுதி வளாகத்தில் செடிகள் மரக்கன்றுகள் நடுதல்
4. மாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, முழக்கங்கள் ஆகியன Garbage free India - குப்பைகள் இல்லா இந்தியா தலைப்பில் நடத்துதல் 5. பள்ளிகளில் சுகாதார பொருட்களை அதாவது குப்பை தொட்டிகள், கழிவறைகளை புதியதாக மாற்றுதல் அல்லது பராமரித்தல்
6. குபைகள் தரம் பிரித்தல் மற்றும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி குறித்த விழிப்புணர்வு உண்டாக்கிடும் வகையில் பேரணி நடத்துதல்
துாய்மை சார்ந்த நிகழ்வுகள்" (Swachhta Hi Seva) மற்றும் " குப்பைகள் இல்லா இந்தியா " Garbage free India - தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் வினாடி - வினாப் போட்டிகளை நடத்துதல்
8. பள்ளிகளில் சுகாதார குழு உருவாக்குதல்
9. பள்ளிகளிடையே பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நாட்டின் சுகாதார பயணம் குறித்து நடத்துதல்
10. காலை பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் சுகாதாரத்தில் தன்னுடைய பங்களிப்பினை சார்ந்தும் ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த விவரங்களை பகிர்தல் எனவே செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை மேற்குறிப்பிட்டவாறு நிகழ்வுகளை மாவட்ட கட்டடப்பணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைந்து மாவட்டம் வாரியாக தொகுத்து அக்டோபர் 01 மற்றும் 02 அன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு தெரிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.