நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 23, 2023

நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ரிட் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி Supreme Court allows withdrawal of NEET-Writ Petition நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக, கடந்த அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது விரைவில் விசாரணை -உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நீட் தேர்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இளங்கலை மருத்துவ படிப்புக்கான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் பரிசீலனை இருப்பதை சுட்டிக்காட்டி இந்த மனு மீதான விசாரணை 6 மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்திருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற கோரி தமிழ்நாடு அரசு கடந்த வாரம் புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.