பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி பயணம் கட்டாயம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 22, 2023

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி பயணம் கட்டாயம்



பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி பயணம் கட்டாயம் Plus 2 students are mandatory

சென்னை:உயர் கல்வி படிக்க ஊக்கம் ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களை, அருகில் உள்ள கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

மாநிலம் முழுதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்து உயர் கல்வி படிக்க ஆர்வமூட்ட வேண்டும்.

இதற்காக, ஒவ்வொரு அரசு பள்ளியும் அருகில் உள்ள கல்லுாரிகளுக்கு, தங்கள் பள்ளி பிளஸ் 2 மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், 10 முதல் 15 மாணவர்களாக, கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள படிப்புகள் குறித்து தெரியப் படுத்த வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தன்னாட்சி கல்லுாரிகள், மத்திய பல்கலைகள், மாநில பல்கலைகளுக்கு, மாணவர்களை அழைத்து செல்லலாம்.

மார்ச் 1 முதல் இந்த நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். இந்த பயணத்துக்கான செலவு தொகை தனியாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.