திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 22, 2023

திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து ஆணை

The cost of free wedding in the temples raised from Rs. 20,000/- from Rs. 50,000/-
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50.000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.69
நாள் 16.02.2023 சுபகிருது. மாசி-4
திருவள்ளுவர் ஆண்டு 2054
படிக்கப்பட்டவை:
1. அரசாணை (நிலை) எண்.163, சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி1-1) துறை. நாள் 18.07.2022 2. இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் கடித ந.க.எண். 34106/2022/இசட்1, நாள் 22.12.2022 மற்றும் 08.02.2023.
ஆணை:-
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது. 2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிததங்களில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும், மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 ஏழை எளிய இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே நடத்தி முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20,000/- தொகையினை ரூ.50,000/- ஆக
3. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதாலும், உபயதாரர் கிடைக்காத நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும். திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினத் தொகையை ரூ.20.000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.
CLICK HERE TO DOWNLOAD 1
CLICK HERE TO DOWNLOAD 2

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.