பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார்
செய்திக் குறிப்பு எண்: 003/022023
பத்திரிகையாளர் அழைப்பு நாள்: 28/02/2023
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - திறப்பு விழா
இடம் : டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை - 34
நாள்: 01.03.2023 - நேரம் : காலை 10 மணி
தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு என்பதை தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்துவருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அந்தத் திட்டங்களுக்கு உறுதுணை புரியும் வகையில், கட்டமைப்பு வசதிகளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் (Assessment cell), முன்னோட்டக் காட்சி அரங்கம் (Preview theatre), 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இவற்றைத் திறந்து வைக்க இருக்கிறார். நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா ஆப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.
ஆணையர்
பள்ளிக் கல்வி

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.