வகுப்பறை கட்ட ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து 3ம் வகுப்பு மாணவி கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 27, 2022

வகுப்பறை கட்ட ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து 3ம் வகுப்பு மாணவி கடிதம்

வகுப்பறை கட்ட ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து 3ம் வகுப்பு மாணவி கடிதம்

பாவூர்சத்திரம் அருகே தனது கோரிக்கையை ஏற்று பள்ளி வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து 3ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதியுள்ளார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகள் ஆராதனா. இவர் வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தரும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் தென்காசியில் கடந்த மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவியின் கோரிக்கையை ஏற்று அப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.35.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவி ஆராதனா கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘நான் அனுப்புன மனு கடிதத்தை ஏற்று எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாகனும்னு சொன்னீங்க ஐயா. நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்கள் தான் முதலமைச்சராக இருக்கனும் ஐயா. உங்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.