ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 27, 2022

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!!

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

👉 பல்வேறு கனவுகளுடனும் லட்சியங்களுடனும்...தாம் விரும்பிய தமக்கான ஆட்சி வரவேண்டும் என்று லட்சோபோ லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பகை முடிப்போம் பணி முடிப்போம் என்ற லட்சியத்துடன் ஒவ்வொரு அரசு ஊழியரும் தி.மு.கவின் ஐடி விங்கை விட அதிகமாக பிரச்சாரம் செய்து தான் விரும்பிய அரசை அமர்த்தினர்... தனக்கான அரசாக அமையும் என்று ஏங்கினர் நடந்ததோ வேறு ....

👉 ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்தாக CPS ஒழிப்பு என்ற வார்த்தை இருக்கும் என்று ஏங்கினார்கள்... ஆனால் நம்ம முதல்வர் அவர்களோ அதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை... 👉 முதலில் இல்லம் தேடி கல்வி என்ற ஒரு திட்டத்தை மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்பு கொண்டு வந்தார்கள் மணவர்கள் கரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் போது கொண்டு வந்திருந்தால் ஏற்றுகொள்ளலாம்.. அது மாணவர்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ... ஆனால் ஆசிரியர்களை வசை பாடுவதற்கு பயன் படுத்தினர்...அதுவும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இல்லம் தேடி கல்வியால் கற்றல் இடைவெளி குறைக்கப்பட்டதாம்... நல்லா நடிக்கிறீங்கப்பா சாமிகளா....

👉 அவ்வபோது மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளை (புகை பிடித்தல் போன்ற போதை பொருள் உபயோகிப்பதை ) தட்டி கேட்டால் கூட திராவிட மாடல் அரசு ஆசிரியர்களைத்தான் சஸ்பென்ட் செய்தது....

👉 சரண்டர் கிடைக்கும் என ஏங்கிய ஆசிரியர்களை சரணாகதி அடைய வைத்தது நம் அரசு ....

👉 ஊக்க ஊதிய உயர்வாது கிடைக்கும் என ஏங்கியவர்களை ... இனி ஒன்றிய அரசை போல் ஊதிய உயர்வு கிடையாது என பேரிடியாக அடித்தது நம் அரசு ...

👉DA விடயத்தில் ஆறு மாதம் கழித்துதான் DA என்று எந்த அரசும் உருவாக்காத புதிய நடைமுறையை உருவாக்கி ஒவ்வொரு முறையும் ஆறு மாத DA வை பகல் கொள்ளையாக பறித்தது...

👉 *இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை- சம ஊதிய கனவானது 10 ஆண்டுகளாகியும் இன்றும் கானல் நீராக உள்ளது....தான் பணியேற்ற நாளைக்கு ஒரு நாள் முன்னதாக பணியேற்ற இடை நிலை ஆசிரியர்களை விட 20000 ரூபாய் குறைவாய் வாங்குகிறார்கள்... இது சமூகநீதிக்கு எதிரானது என்பதை எப்போது உனர்வார் நம் முதல்வர் ...*

👉 நிதி நிலைமை சரி இல்லை என்று கூறிக்கொண்டே கலைஞர் நூலகம்.. மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் போன்றவைகளுக்கு நிதியை வாரி வழங்கினர்...

👉 பென்சன் கேட்டுப் போராடும் அரசு ஊழியர்களை அவ்வபோது எள்ளி நகையாடினார் நமது நிதித்துறை அமைச்சர் ... பெரிய பெரிய பிளைட்டுகளில் தான் பயணம் செய்வேன் என தம்பட்டம் அடிக்கும் நமது நிதித்துறை அமைச்சர் ...MLA MP க்களுக்கு சம்பள உயர்வு இரண்டு மடங்கு ஆக்க வேண்டும் என கூறுகிறார் ஆனால் அரசு ஊழியர்களுக்கு பென்சன் கொடுக்க சாத்தியம் இல்லையாம்... தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல மாநில அரசுகள் பென்சன் அறிவித்துள்ளது ... ஆனால் நம் முதல்வர் நிதி அமைச்சரை வைத்து நம்மிடம் நாடகம் ஆடுகிறரர்...

👉 அவ்வபோது நம்மை ஆப்பின் (App)மூலம் அச்சுறுத்துகிறார்கள்...

👉 குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் கொண்டு வருவார் ஆனால் அதன் பணியாளர்களை நிரந்தரமாக்க மாட்டார்... 👉 மாணவர்களின் Health Checkup ஐயும் ஆசிரியர்களை வைத்து முடிக்க வைத்தார்கள்... தைராய்டு போல பல வினோத பிரச்சினைகளை கூட எவ்வித மருத்துவ அனுபவமும் இல்லாமல் திடிர் டாக்டர் போல் மாணவர்களிடம் கேட்டு Appல் பதிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்...

👉 இதையெல்லாம் சகித்து கொண்ட ஜாக்டோ ஜியோ முதல்வரை அழைத்து மாநாடு நடத்தியாவது விடியல் அரசில் நமக்கு பிரச்சினைகள் சரியாகும் என்று எண்ணினர் மாநாட்டில் மிகப்பெரிய கூட்டம் கூடியது... ஆனால் முதல்வரோ வழக்கம் போல சொல்லாததையும் செய்வேன் என டாடா காட்டி விட்டு சென்று விட்டார்...பல லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் ...

👉 101 & 108 அரசானைகள் ரத்து செய்வோம் என மேடைக்கு மேடை கூறினார் கல்வித் துறை அமைச்சர் ...ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 101 அரசானை 151 ஆக மடைமாற்றம் செய்யப்பட்டது ... (DEEO உருவாக்கப்பட்டது...)எந்த நலனும் கிடைக்க வில்லை...

👉 கல்வித்துறை அமைச்சர் பேட்டியில் பேசுவது ஒன்று ஆனால் செயல் படுத்துவது ஒன்று...ஆசிரியர் மனசு திட்டத்தை உருவாக்கினார் அது ஆசிரியர் சங்கங்களை ஒழிக்கும் திட்டமாகத்தான் செயல்படுகிறது...

👉 1, 2, 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு App வழியே மாநில அளவில் ஒரே வகையான எண்ணும் எழுத்தும் தேர்வு ... இந்த தேர்வின் மூலம் மாணவர்களின் எழுதும் திறன் குறைகிறது ...அதிகாரிகளுக்கு பயந்து ஆசிரியர்களை Ans செய்யும் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது ... ஒரு மாணவனை முழுமையாக மதிப்பிட அவனது எழுத்து தேர்வின் மூலமே மதிப்புட முடியும்...

👉 புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்க்கிறோம் என்று அமைச்சர் பொன்முடி கூறினார் ...ஆனால் புதிய கல்வி கொள்கையின் கூறுகளான 4, 5 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு .. அதுவும் டபுள் லாக் சாவி பயன்படுத்தி பத்திரமாக வைத்து மாணவர்கள் தேர்வுக்கு முன்பு தான் பிரிக்க வேண்டுமாம்... எத்தனையோ பின்தங்கிய (மலைப்பகுதி) பள்ளிகளில் பார்த்து கூட எழுத முடியாத சூழலில் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் எப்போது உணர்வார்கள்...

👉 4, 5ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வாம் ... மாநில அளவில் ஒரே வகையான தேர்வுத் தாள் அதுவும் பலத்த பாதுகாப்புடன் .. தினம் தினம் காலையில் தேர்வுத்தாள் வாங்கி வந்து தேர்வு வைக்க வேண்டுமாம்... ஆனால் அதற்கு மேல் வகுப்புகளுக்கு பள்ளி அளவில் எடுத்து கொள்ளலாமாம்... அட பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10ம் வகுப்பிற்கு கூட மாவட்ட அளவில் தேர்வுத்தாள் தயாரித்து கொள்ளலாமாம்... இது மணவர் மீது உள்ள அக்கறையா?... இல்லை இடைநிலை ஆசிரியர் சங்கங்களை (போராட்ட களத்திற்கு வர விடாமல் உடைக்க வேண்டும் என்ற வன்மமா?.... 👉 கல்வித்துறையில் உயர்கல்வி செல்லாத மாணவரை கணக்கெடுத்து அவர்களை படிக்க வைக்கிறோம் என விளம்பரம் ஆனால் இந்த கல்வி ஆண்டில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு 10% ற்கு அதிகமான குழந்தைகளை பெயில் போட்டுள்ளது கல்வித்துறை... இவர்கள் தொடர்ந்து துணைத் தேர்வு எழுத முடியாமல் வீட்டிலே முடங்கியுள்ளனர்.

👉 மாணவர்கள் நலனில் அக்கறை என சொல்கிறார்கள் ஆனால் சீருடை புத்தகம் பாடக்குறிப்பேடு போன்றவை கூட ஒரு மாதத்திற்கும் மேல் தான் கிடைத்தது...இன்னும் குழந்தைகளுக்கு புத்தகப்பை... கிரையான்ஸ் போன்றவை கூட கிடைக்கவில்லை...

👉 புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என விடிய விடிய மைக்ல கூவி விட்டு ஆனால் புதிய கல்வி கொள்கை முழுவதுமாக அமல்படுத்தி விட்டார்கள்....

👉 தினம் தினம் எதாவது ஒரு ஆசிரியர் எந்த காரணமும் இல்லாமல் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள்...

👉 இந்த வருடம் மட்டும் பல ஆசிரியர்கள் மன உளைச்சலால் VRS விருப்ப ஓய்வு கொடுக்க தயாரகிவிட்டார்கள்...

👉பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களையும் மாணவர்களையும் காவு வாங்காமல் விடாது போல ...

👉 தற்போது ஆசிரியர் சங்கங்களுக்கு இருக்கும் சவால் ஆசிரியர்களை காப்பாத்துகிறோமோ இல்லையோ... மாணவர்களையாவது பல்வேறு வடிவில் புதிய கல்வி கொள்கையை புகுத்தி மாணவர்களை காவு வாங்காமல் தடுக்க வேண்டும் ...

ஆசிரியர் நலன் - மாணவர் நலன் என்ற கோட்பாடை முன்னிறுத்தி...எந்த சமரசமும் இல்லாமல் போராட்ட களம் கண்டால் மட்டுமே... குறைந்த பட்ச உரிமை மற்றும் மாணவர் நலன்களை பெற முடியும்...

🙏🙏🙏நன்றி🙏🙏🙏

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.