மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 1, 2022

மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில்

மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

செப்.1:சென்னை பல்கலைக்கழகத்தின் கட் டுப்பாட்டின் கீழ் செயல்ப டும் கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளில் வரும் செப்டம்பர் 16ம் தேதிவரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல் கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல் கலைக்கழக கட்டுப்பாட் டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் செப்டம்பர் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தகு தியின் அடிப்படையில் பல் கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்க ழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக் கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல் லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாண வர்கள் ஆர்வம் காட்டிவரு கின்றனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஜூலை 22ம் தேதி வெளி யானது. இதை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஐந்து நாட்கள் நீட்டித்தது. பொறி யியல் படிப்பிற்கு விண்ணப் பிக்க அவகாசம் 27ம் தேதி முடிவடைந்து.

கலந்தாய்வும் நடந்து வரு கிறது. கடந்தாண்டை காட் டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப் பித்துள்ளனர். இதேபோல், 163 அரசுகலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் சேரு வதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப் பப்பித்துள்ளனர். எனவே, மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர் வம் அதிகரித்துள்ளதால் சென்னை பல்கலைக்கழ கம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை செப் டம்பர் 16ம் தேதி வரை நீட் டித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.